முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • பத்திரிகையாளரை தாக்கிய விசிகவினர்

    ராணிப்பேட்டை: திருமாவளவனை கடுமையாக விமர்சித்த பத்திரிகையாளர் ஒருவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அடித்து நொறுக்கினர். வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் ‘கலைஞர் பாதை’ என்ற பெயரில் மாத இதழ் நடத்திவருபவர் குணசேகரன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் நட்பாக பழகிவந்த அவர், சமீபத்தில் திருமாவளவன் இந்து மத கடவுளை விமர்சித்ததாக தனது டுவிட்டர் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்நிலையில், பத்திரிகையாளர் குணசேகரனை ராணிப்பேட்டைக்கு வரவழைத்து விசிக.,வினர், சரமாரியாக தாக்கியுள்ளனர். காயங்களுடன் அவர்களே விடுவித்தும் உள்ளனர். விசிக.,வினர் மீது குணசேகரன்

    READ MORE
  • தலையில் தேங்காய்.. விநோத விழா

    ஒசூர்: ஓசூர் அருகே கனகதாசர் 532 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தலையில் தேங்காய் உடைக்கும் விநோத நிகழ்வு நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் குருபர் நல சங்கம் சார்பில் கனகஜோதி சேவா சமிதி சார்பில் கவி கனகதாசர் 532 வது ஜெயந்தி விழா நடைபெற்றது. முன்னதாக குருபர் குல தெய்வங்களுடன் குருபர் கலாச்சார் கலை நிகழ்ச்சிகளாகிய டொல்லு குணிதா, வீரகாசை வீரபத்திர குணித, கனகதாசர் பல்லக்கு ஊர்வலத்துடன் பெண்கள் பூ கலசங்கள் ஏந்தி

    READ MORE
  • அமோக விளைச்சல்; விவசாயிகள் மகிழ்ச்சி

    ஓசூர்: 5 ஆண்டுகளுக்கு பிறகு ராகி அமோக விளைச்சலால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.   கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள ராகி, அமோகமாக விளைந்து அறுவடைக்கு தயாராகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஓசூர்,சூளகிரி,கெலமங்கலம்,தளி ஆகிய ஒன்றியங்களில் 40 ஆயிரம் ஹெக்டேர்களில் ராகி பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டு போதிய மழையின்றி விளைச்சல் குறைந்து, விவசாயிகளும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு சரியான சமயத்தில் நல்லமழை பெய்து, வயலில் ஈரப்பதம் நிலவியதால் ராகி கதிர்கள்

    READ MORE
  • திமுக புதிய எம்எல்ஏக்கள் அண்ணா அறிவாலயம் வருகை!

    சென்னை: நடந்துமுடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக எம்எல்ஏக்கள் 13 பேரும் இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தின் சபாநாயகர் அறையில் பதவியேற்க உள்ளனர். இந்நிலையில், தற்போது 13 புதிய எம்எல்ஏக்களும், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்து சேர்ந்துளனர்.

    READ MORE
  • இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்!

    சென்னை: டெல்லியில் நடப்பு ஆண்டின் காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. தமிழகத்தின் குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் 12ம் தேதி காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால், தண்ணீர் திறந்து விடுவது குறித்து ஆணையம் தரப்பில் எந்த உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில், விவாசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில், டெல்லியில் கடந்த 23ம் தேதி காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தது. அதில், ஜூன் 1ம் தேதி முதல் தண்ணீர்

    READ MORE
  • மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு!

    சென்னை: வரும் 30ம் தேதி, மத்தியில் மோடி தலைமையிலான அரசு பதவியேற்கிறது. இதற்காக வெளிநாட்டு, உள்நாட்டு தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்ட்டுள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், திமுக சார்பில், டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு