நியூசிலாந்து அணிக்காக விளையாடுகிறாரா இந்தியா அணி வீரர்

  • In Sports
  • October 29, 2020
  • 306 Views
நியூசிலாந்து அணிக்காக விளையாடுகிறாரா இந்தியா அணி வீரர்

இந்திய கிரிக்கெட் அணி வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்ய உள்ளது என்பதும் அதற்கான அணி வீரர்கள் விவரம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே \

இந்த அறிவிப்பில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று தொடர்களிலும் ரோகித் சர்மா பெயர் இல்லை. காயம் காரணமாக அவரது பெயர் இடம் பெறவில்லை என்று தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் ஐபிஎல் போட்டியில் பேட்டிங்கில் கலக்கி வரும் சூரியகுமார் யாதவ் பெயர் இல்லாதது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. இதனால் சூர்யகுமார் யாதவ் தரப்பும் அதிர்ச்சியில் இருந்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்காட் ஸ்டைரீஸ் என்பவர் தங்களது நாட்டு அணியில் சூர்யகுமார் யாதவ் விளையாடலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.நியூசிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனான இவர் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யகுமார் யாதவ், நியூசிலாந்து அணிக்கு வரவிரும்பினால், கேப்டன் வில்லியம்சன் அவர்களிடம் தான் பரிந்துரை செய்வதாகவும், அவர் இதற்கு ஒப்புக்கொள்வார் என்றும் ஸ்காட் ஸ்டைரீஸ் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணியின் அழைப்பை ஏற்று சூர்யகுமார் யாதவ் செல்வாரா அல்லது இந்திய அணியில் இடம்பிடிக்க முயற்சிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்