முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

 • விமான விபத்து; 7 பேர் பலி

  கொலம்பியா: கொலம்பியாவில் சிறிய ரக விமான விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கொலம்பியா நாட்டின் போபாயன் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்புக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. புறப்பட்ட உடனேயே நகரத்தின் குடியிறுப்பு பகுதிக்குள் விழுத்த விமானத்தில் 9 பேர் பயணம் செய்தனர். இதில் 7 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  READ MORE
 • ஜனாதிபதி விமான கோளாறு: விசாரணைக்கு உத்தரவு

  சுவிட்சர்லாந்து: ஜனாதிபதி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் நேற்று கோளாறு ஏற்பட்டதற்கு விமான நிறுவனம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சென்ற விமானம் சுவிட்சர்லாந்து சூரிச் விமான நிலையத்தில் நேற்று கோளாறு ஏற்பட்டதால் விமானத்தை சுமார் 3 மணி நேரம் தாமதப்படுத்தியது. இந்த விமானம் சூரிச்சிலிருந்து ஸ்லோவேனியாவுக்கு பறக்க திட்டமிடப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கு செல்லவிருந்தது குறிப்பிடத்தக்கது.

  READ MORE
 • பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு

  மும்பை: சர்வதேச அளவில் சவுதி அரேபியாவிலிருந்துதான் அதிகளவு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சவுதி அரேபியாவிலிருந்து 98 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சவுதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் உள்ள கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலை மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் உற்பத்தி தற்போது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

  READ MORE
 • சுவிஸர்லாந்தில் காந்தி சிலை திறப்பு

  வில்நியூவே: சுவிஸ் நாட்டில் வில்நியூ நகரில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காந்தி சிலையை திறந்து வைத்தார். அரசு முறைப் பயணமாக குடியரசுத்த¬லைவர் ராம்நாத் கோவிந்த் சுவிஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அந்நாட்டின் வில்நியூவே நகரின் ஜெனிவா ஏரிக்கரையில் நிறுவப்பட்ட காந்தி சிலையை அவர் திறந்து வைத்து பேசினார். அப்பகுதிக்கு காந்தி சதுக்கம் என்று பெயரிடப்பட்டதற்கு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நன்றி தெரிவித்தார்.

  READ MORE
 • 10ம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய அட்டவணை

  சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் புதிய தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மார்ச் 17ம் தேதி – ஏப்ரல் 9ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், தற்போது மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெறும் என புதிய அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. மொழித்தாள் தேர்வுகள் ஒரே தாளாக மாற்றப்பட்டதால் தேர்வு அட்டவணையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

  READ MORE
 • ஹெல்மட் அணியாத 1.18 லட்சம் பேர்

  சென்னை: தமிழகம் முழுவதும் நடந்த வாகன சோதனையில், கடந்த 2 நாட்களில் மட்டும் 1,18,018 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையி, சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்கவும், போக்குவரத்து விதி மீறல்கள் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். அதன்படி, கடந்த 14 மற்றும் 15ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு வாகன சோதனை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த சோதனையில், ஹெல்மெட்

  READ MORE
 • தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை

  சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பசலனம் காரணமாக அடுத்த 2 நாட்கள் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வானிலை மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையை பொறுத்த வரையில் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு நேரங்கில் இடியுடன் கூடிய மழை பெய்யும். மேலும், சுழல்காற்று வீசும் என்பதால் குமரி கடல் பகுதியில் மீனவர்கள் 2 நாட்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கூறினார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்கள்

  READ MORE
 • ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 30ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என காலிஸ்தான் இயக்கத்தை சேர்ந்த ஹர்தர்ஷன் சிங் நாக்பால் என்பவர் தலைமை பதிவாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இயக்கத்தின் பெயர், முகவரி மற்றும் செல்போன் எண்ணுடன் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  READ MORE
 • செப்., 20ல் திமுக ஆர்ப்பாட்டம்

  சென்னை: வரும் 20ம் தேதி இந்தி திணிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக உயர்நிலைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுகவின் உயர்நிலை செயல் திட்ட குழுக்கூட்டம் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் துரைமுருகன், கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் செப்டம்பர் 20ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

  READ MORE
 • 10ம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய அட்டவணை

  சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் புதிய தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மார்ச் 17ம் தேதி – ஏப்ரல் 9ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், தற்போது மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெறும் என புதிய அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. மொழித்தாள் தேர்வுகள் ஒரே தாளாக மாற்றப்பட்டதால் தேர்வு அட்டவணையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

  READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு