‘நேர்கொண்ட பார்வை’ அஜித் லுக்கில் ஸ்டைலிஷ் போட்டோஷூட்: விவேக்கின் வைரல் புகைப்படங்கள்!

‘நேர்கொண்ட பார்வை’ அஜித் லுக்கில் ஸ்டைலிஷ் போட்டோஷூட்: விவேக்கின் வைரல் புகைப்படங்கள்!

கருப்பு நிற ஸ்டைலிஷ் உடை, சால்ட் அண்ட் பெப்பர் லுக் என நடிகர் விவேக் ‘நேர்கொண்ட பார்வை’ பட அஜித் கெட்டப்பில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் வைரல் ஆகியுள்ளது.

1987 ஆம் ஆண்டு வெளியான ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விவேக் புதுப்புது அர்த்தங்கள் படத்தின் மூலம் ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனத்தின் மூலம் பிரபலமானார்சமூக அக்கறையுள்ளக் கருத்துகளைப் பேசுவதால் ‘சின்னக் கலைவாணர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

ரஜினி ,விஜயகாந்த், அஜித்,விஜய்,சூர்யா,மாதவன், தனுஷ்,சிம்பு என தமிழின் பெரும்பாலான முன்னணி நடிகர்ளுக்கும் நண்பராக வந்து காமெடியில் கலக்கியுள்ளார்.

இவர், கடந்தவாரம்தான் அன்பின்:அமைதியின் நிறமான வெள்ளை நிற ஆடையில் அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் அனைத்தும் ஆஹா சொல்ல வைத்தன. அஜித்தா? இல்ல விவேக்கா? என்று நம்மை கண் கொட்டாமல் பார்த்து ரசிக்க வைத்தது. அந்த புகைப்படங்களூக்கு சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுகளும் கிடைத்தன. இந்நிலையில், விவேக் தற்போது மீண்டும் அஜித்தின் ‘ஆரம்பம்’ பட லுக்கில் கருப்பு நிற ஸ்டைலிஷ் உடையில் போட்டோ ஷூட் நடத்தியிருப்பது வைரல் ஆகியுள்ளது. நடிகர் விவேக், அஜித்துடன் பூவெல்லாம் உன்வாசம் ஆழ்வார், கிரீடம், என்னை அறிந்தால் உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் விவேக், கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘நான் தான் பாலா’ படத்தின் மூலம் ஹீரோவானார். மீண்டும் ஹீரோவாக கடந்த ஆண்டு அவர் நடிப்பில் ‘வெள்ளைப்பூக்கள்’ வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தவாரம் நடத்திய போட்டோ ஷூட்டுக்கே பலரும் இயக்குநர்கள் இனி விவேக் வீட்டைத்தான் முற்றுகையிடுவார்கள் என்று பாராட்டினார்கள். இந்நிலையில், கருப்பு நிற உடையில் மீண்டும் போட்டோ ஷுட் நடத்தியிருப்பது, அடுத்த ஆண்டில் விவேக்கின் படங்கள் வரிசைக்கட்டத்துவங்கும் என்று பாராட்டி வருகிறார்கள்!

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்