மாணவர்கள் உலக சாதனை

மாணவர்கள் உலக சாதனை

ஒசூர்:

ஓசூரில், தனியார் பள்ளி சார்பில் 1800 மாணவ, மாணவியரின் உலக சாதனைக்கான முயற்சி நடைப்பெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தனியார் பள்ளி மாணவர்கள் சார்பில் உலக சாதனைக்கான முயற்சியை நடத்தினர்.

இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் சைத்தன்யா பள்ளி சார்பில், மாநிலங்கள் தோறும் இன்று நடனம் மற்றும் யோகாசனங்கள் மேற்க்கொள்ளும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதற்கான முயற்சி நடைப்பெற்றது.

இதன் ஒரு பகுதியாக ஓசூரில் இரண்டு கிளைகளாக இயங்கி வரும் தனியார் பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவியர் சுமார் 1800க்கும் மேற்ப்பட்டோர் “MASS DRIL” என்னும் நடனத்தை இசைக்கேற்ப தொடர்ந்து 7 நிமிடங்கள் ஆடினர், பின்பு 1500க்கும் மேற்ப்பட்ட மாணவ – மாணவியர் ஒரே இடத்தில் யோகா பயிற்சியில் 45 ஆசனங்களை 20நிமிடம் மேற்க்கொண்டனர்.

இந்த சாதனை நிகழ்ச்சி 6 நாடுகளை சார்ந்த பன்னாட்டு உலக சாதனையை அங்கீகரிக்கும் அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்டது.

சாதனை முயற்சியை Elite world record, Asian Records ஆகியோர் இதனை உலக சாதனையாக அங்கீகரித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்