புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

  • In General
  • November 6, 2020
  • 471 Views
புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது.

நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பேட்டரி வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிச்சலுகை அளித்துள்ளது.பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க செய்வதன் மூலம், காற்று மாசை கட்டுப்படுத்த முடியும் என்று தமிழக அரசு உறுதியாக நம்புகிறது.

இதனால், பேட்டரி மூலம் இயங்கும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 100 சதவீத வரிச் சலுகை கிடைக்கும் தமிழக உத்தரவிட்டுள்ளது.

பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு இதுவரை 50 சதவீத வரி விலக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது . நூறு சதவீத வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை வரும் 2022-ம் ஆண்டு இறுதி வரை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனால், பேட்டரி கார் வாங்குபவர்களுக்கு 100 சதவீதம் வரிச்சலுகை கிடைக்கும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்