‘‘ஒசூர் மாநகராட்சி; மா நரகாட்சி’’ – முன்னாள் எம்எல்ஏ

‘‘ஒசூர் மாநகராட்சி; மா நரகாட்சி’’ – முன்னாள் எம்எல்ஏ

ஒசூர்:

ஓசூர் மாநகராட்சி, மா நரகாட்சியாக செயல்பட்டு வருவதாக ஓசூர் முன்னாள் எம்எல்ஏ மனோகரன் விமர்சனம் செய்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ மனோகரன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து அவர் அளித்த பேட்டியில்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய மருத்துவக்கல்லூரியை தொடங்க நடவடிக்கை எடுத்து ஒப்புதல் வழங்கிய மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், ஓசூர் பகுதி என்பது தொழிற்சாலைகள், மலைக்கிராமங்கள், குக்கிராமங்கள் இருப்பதால் மருத்துவக்கல்லூரியை ஓசூர் பகுதியில் அமைத்திட மாநில அரசு முன்வர வேண்டும்.
ஓசூர் மாநகரிலேயே அரசிற்கு சொந்தமான காலி நிலங்கள் மருத்துவக்கல்லூரி துவங்க போதுமானதாக இருப்பதால் நிலம் கையகப்படுத்துவதில் எந்த சிக்கலுமில்லை. இஎஸ்ஐ உள்ளிட்ட மருத்துவமனைகளை விட மருத்துவக்கல்லூரியால் அதிக சேவை வழங்க முடியும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஓசூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் சாலைகள் சரிசெய்யப்படாமல் இருப்பதாகவும், ஓசூர் காவல்நிலையங்களில் போதிய அளவிலான காவலர்கள் இல்லை. உட்கட்டமைப்பு வசதியில்லாத “ஓசூர் மாநகராட்சி மா நரகாட்சியாக” இருப்பதாக விமர்சித்தார்.
மாநகராட்சி அதிகாரிகள் ஓசூரில் அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்தார். மத்திய அரசிற்கு, தமிழக அரசு தொர்ந்து சாதகமாகவே செயல்படுவதாலேயே அனைத்து துறைகளிலும் சிறந்து விளக்குவதாக பரிசுகளை வழங்கி வருகிறதோ என்கிற சந்தேகம் இருப்பதாக இவ்வாறு பேசினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்