அமெரிக்கா தேர்தல் நிலவரம்

அமெரிக்கா தேர்தல் நிலவரம்

தற்போதைய நிலவரப்படி இன்னும் 3 மாநிலங்களில் வெற்றி பெற்று விட்டால் ஜோ பைடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் ஆகிவிடுவார்கள்.

கலிஃபோர்னியா, ஆரெகன், வாஷிங்டன், நியூ மெக்சிகோ, கொலராடோ, மினசோட்டா, விஸ்கான்ஸின், இலனாய், வர்ஜீனியா, வாஷிங்டன் டி.சி, மேரிலாண்ட், டெலவர், நியூஜெர்ஸி, நியூயார்க், கனெக்டிகட், ரோட் ஐலண்ட், மசசூசட்ஸ், வெர்மாண்ட், நியூஹாம்ஸ்ஷையர், மெய்ன் ஆகிய மாநிலங்களில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 237 அதிபர் வாக்குகள் கிடைத்துள்ளது.

அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இன்னும் 33 வாக்குகள் தேவை. நெவடா (6), அரிசோனா (11), மிக்சிகன் (16) ஆகிய மூன்று மாநிலங்களில் ஜோ பைடன் தற்போது முன்னிலையில் இருக்கிறார்.இந்த மூன்று மாநிலங்களிலும் வெற்றி பெற்று விட்டால் 33 அதிபர் வாக்குகள் கிடைத்து மொத்தம் 270 அதிபர் வாக்குகளாக உயரும்.

ஜார்ஜியா, பென்சில்வேனியா முடிவுகள் இல்லாமலேயே ஜோ பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுவார். தற்போதைய நிலவரப்படி அதிபர் ட்ரம்ப்-க்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்