சட்டப்பேரவை தேர்தலில் நல்லவர்களுடன் கூட்டணி அமைப்போம்.. சகாயம் ஐஏஎஸ் போன்ற நல்லவர்கள் எங்களளுடன் இணைய வேண்டும் : கமல்ஹாசன்

சட்டப்பேரவை தேர்தலில் நல்லவர்களுடன் கூட்டணி அமைப்போம்.. சகாயம் ஐஏஎஸ் போன்ற நல்லவர்கள் எங்களளுடன் இணைய வேண்டும் : கமல்ஹாசன்

சென்னை திநகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன்,’சட்டப்பேரவை தேர்தலுக்கான வியூகத்தை தற்போது வெளியிட இயலாது. சட்டப்பேரவை தேர்தலில் நல்லவர்களுடன் கூட்டணி அமைப்போம்.தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் போன்ற நல்ல கட்சிகளும் இருக்கின்றன.பல்வேறு கட்சிகளில் நல்லவர்கள் பலர் இருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யம் அமைக்கும் கூட்டணி 3வது அணியாக இருக்காது, முதல் அணியாக இருக்கும்.நேர்மை என்பது தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை.100 முதல் 160 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் தாக்கத்தை ஏற்படுத்தும்.3வது கூட்டணி அமைந்துவிட்டது; சட்டப்பேரவையில் ம.நீ.ம குரல் ஒலிக்கும்.சட்டப்பேரவை தேர்தலில் கண்டிப்பாக நான் போட்டியிடுவேன்வேட்புமனுவில் கையெழுத்திடும் போதே எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பது தெரியும். மக்கள் நீதி மய்யத்தின் முதலமைச்சர் வேட்பாளர் என்பது எனக்கு ஒரு பெரிய பொறுப்பு.கட்சி நிர்வாகிகள் கூடி யார் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்படும்.சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயார் செய்து கொண்டிருக்கிறோம் .சகாயம் ஐஏஎஸ் போன்ற நல்லவர்கள் எங்களளுடன் இணைய வேண்டும்,’ என்றார்.

மேலும் அவர் பேசியதாவது, ‘தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்பது தான் பெரிய பிரச்சனை.இளைஞர்களுக்கான வேலையை யார் வாங்கித் தருவது என்பது தான் எனது முதல் நோக்கம்.சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கலாம்.வேல் யாத்திரை என்பதை விட இளைஞர்களுக்கு வேலை தேவை என்பது தான் முக்கியம்.நாங்கள் செய்யப்போவது பழிபோடும் அரசியலும் அல்ல; பழிவாகும் அரசியலும் அல்ல; வழிகாட்டும் அரசியலை செய்யப்போகிறோம்,’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘தமிழக அரசியல் நிலவரம் குறித்து ரஜினியும் நானும் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம்.ரஜினி உடல் நலம் தொடர்பான அறிக்கையில் இடம்பெற்றிருந்த தகவல்கள் எனக்கு முன்கூட்டியே தெரியும்.சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச இது சரியான தருணம் இல்லை.
நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும், ஆனால் ரஜினியின் உடல் நிலையும் முக்கியம்.நான் எந்த கட்சியின் பி டீம் இல்லை, எப்போதும் நான் ஏ டீமாகத்தான் இருந்துள்ளேன்.பண்டிகைகளின் போது மட்டும் அல்ல தேர்தலின் போதும் மக்களுக்கு பணம் கொடுக்கிறார்கள்.கொரோனாவால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் அவர்களுக்கு ஏன் பண உதவி செய்யவில்லை,’ என்று குறிப்பிட்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்