ஒசூரில் கேஸ் கசிவால் தீப்பிடித்து எரிந்த லாரி, 1 ஆட்டோ உட்பட 15 வாகனங்கள் எரிந்து நாசம்

ஒசூரில் கேஸ் கசிவால் தீப்பிடித்து எரிந்த லாரி, 1 ஆட்டோ உட்பட 15 வாகனங்கள் எரிந்து நாசம்

ஒசூரில் சாமையல் சிலிண்டர் ஏற்றிவந்த லாரி கேஸ் கசிவால் தீப்பற்றி எரிந்து 10 க்கும் மேற்பட்ட வாகனங்கள் நாசம்: 2 பேர் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள பிஸ்மில்லா நகரில் கோ கேஸ் என்னும் தனியார் சமையல் சிலிண்டர் கேஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது

இந்த கேஸ் நிறுவனத்திலிருந்து சிலிண்டர்களை எடுத்துக்கொண்டு லாரி ஒன்று ஒசூர் நோக்கி அலசநத்தம் பகுதிக்கு வந்தபோது லாரியிலிருந்த கேஸ் கசிவதை அறிந்த ஓட்டுநர்

அலசநத்தம் நடு சாலையிலேயே லாரியை நிறுத்தி விட்டு அப்பகுதி மக்களை ஓடி விடுமாறு கூறி அங்கிருந்து தப்பி உள்ளார். கடைக்காரர்களும் கடையின் முன்பக்க கதவினை சாத்திவிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர்

கேஸ் கசிவு திடீரென தீப்பற்றி எரிந்ததால் பல மீட்டர்கள் தூரத்திற்கு அனல் வீசியுள்ளது மேலும் லாரியில் இருந்த காலி சிலிண்டர்கள் கீழே விழுந்துள்ளது.

லாரி முழுமையாக தீப்பிடித்து கரும்புகை கிளம்பியதால் தீ அருகில் இருந்த இறைச்சிக்கடை, மருந்தகம், ஏடிஎம், மளிகை கடைகளுக்கு பரவியது

இதில் 10 க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து முழுமையாக நாசமாகியது, இதில் சாலையோரமாக இருந்த ஆட்டோவும் முழுமையாக எரிந்தது.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வந்த தீயணைப்புத்துறையினர் கடைகள், வாகனங்களில் பரவி வந்த தீயை அணைத்து லாரி மீது நீரை பாய்ச்சி முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

எவ்வித உயிர்சேதங்கள் இல்லாத நிலையில் இறைச்சிக்கடை சாம்சுன் என்கிற இளைஞரும், பிரியாணி கடையை சேர்ந்த மஞ்சு என்கிற பெண்ணும் காயங்களுடன் ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டதால், சேதங்கள் குறித்து ஒசூர் ஹட்கோ போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்