4 ரூபாய்! அறிவிப்பின்றி ஆவின் பால் விலை உயர்வு

  • In Chennai
  • November 6, 2020
  • 240 Views
4 ரூபாய்! அறிவிப்பின்றி ஆவின் பால் விலை உயர்வு

மதுரையில் ஒரு லிட்., மற்றும் அரை லிட்., ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.1 முதல் ரூ.4 வரை எவ்வித அறிவிப்பின்றி, தன்னிச்சையாக உயர்த்தப்பட்டதால், மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.ஆவினில் நான்கு வகை பால் பாக்கெட்டுகள் விற்பனையில் உள்ளன. இதில் ‘எப்.சி.எம். மில்க்’ ஒரு லிட்., ரூ.51க்கு விற்கப்பட்டது. இது 6 சதவீதம் கொழுப்பு, 9 சதவீதம் இதர சத்துக்கள் கொண்டது. ஒரு வாரமாக 1 லிட்., பாக்கெட்டுகள் நிறுத்தப்பட்டு அரை லிட்டர் பாக்கெட்டாக ரூ.26க்குவிற்கப்படுகின்றன. இதன் மூலம் மறைமுகாக ஒரு லிட்., ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது.இதே ‘எப்.சி.எம்.,’ பாலில் இதர சத்து 1 சதவீதம் மட்டும் அதிகரித்து ‘எப்.சி.எம்., டி மேட்’ என்ற பெயரில் ரூ.4 விலை அதிகரித்து ஒரு லிட்., ரூ.55 க்கு தற்போது விற்கபடுகிறது.ஒரு சதவீதம் சத்து அதிகரித்தால் ரூ.2 வரை விலை உயர்த்தலாம். ஆனால் ரூ.4 உயர்த்தியுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.நுகர்வோர் கூறியதாவது:கொரோனா கால கஷ்டத்தில் மதுரையில் மட்டும் பால் விலை உயர்வு மேலும் சோதனையாக உள்ளது. அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார், கலெக்டர் அன்பழகன் ஆகியோர் பால் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.உற்பத்தியாளர்கள் போர்க்கொடி:பால் விலை உயர்வு குறித்து தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும். உற்பத்தியாளர்களுக்கு பால் விலை உயர்த்தப்படும் போது விற்பனை விலை அதிகரிக்கும். 2019 ஆக.,ல் பால் விலையை அரசு உயர்த்தியது.மதுரையில் மட்டும் அதிகாரிகள் தன்னிச்சையாக உயர்த்தியுள்ளதால் கொள்முதல் விலையையும் உயர்த்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்