தன்னுடைய ரத்தம், வியர்வை, கண்ணீரை எங்களுக்காக கொடுத்திருக்கிறார் விராட்.! குவிந்துவரும் வாழ்த்துக்கள்.!

  • In Sports
  • November 5, 2020
  • 228 Views
தன்னுடைய ரத்தம், வியர்வை, கண்ணீரை எங்களுக்காக கொடுத்திருக்கிறார் விராட்.! குவிந்துவரும் வாழ்த்துக்கள்.!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. டெல்லியில் பிறந்த விராட் கோலி, அண்டர்-19 பிரிவில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றபோது, இந்திய அணியின் கேப்டனாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். இதனையடுத்து, இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம்பெற்றார்.

ஐபிஎல் தொடங்கியபோது, டி-20 போட்டியில் பெங்களூர் அணிக்காக விளையாடிய விராட் கோலி 2012ல் பெங்களூர் அணியின் கேப்டன் ஆனார். இன்றுவரை, ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்துவருகிறார் விராட். கோலி தங்களுடன் 12 வருடங்களாக இருப்பதை குறிப்பிட்டுள்ள ஆர்சிபி அணி, அவர் தங்களது அணிக்காக ரத்தம், வியர்வை மற்றும் கண்ணீரை தந்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளது.ஐபிஎல்லில் பிளே-ஆப் சுற்றிற்கு முன்னேறியுள்ள ஆர்சிபி, நாளை நடைபெறவுள்ள எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதவுள்ளது. கடந்த சில போட்டிகளில் தோல்வியடைந்தாலும், தொடரின் ஆரம்பத்தில் இருந்து சிறப்பான வெற்றிகளை தந்துள்ளது ஆர்சிபி. இந்த வெற்றிகளுக்கு ஆர்சிபியின் கேப்டன் விராட் கோலியும் காரணம் என அவரது பிறந்தநாள் தினமான இன்று அவரை பாராட்டி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்