உனக்கு என்ன கொள்கை இருக்கு? பெரிய நாத்திக மயிரு பேசுற… மு.க.ஸ்டாலினை வறுத்தெடுத்த கே.டி.ஆர்..!

  • In Chennai
  • November 5, 2020
  • 232 Views
உனக்கு என்ன கொள்கை இருக்கு? பெரிய நாத்திக மயிரு பேசுற… மு.க.ஸ்டாலினை வறுத்தெடுத்த கே.டி.ஆர்..!

என்ன பெரிய நாத்திக மயிறு பேசுகிறீர்கள். நாத்திகன் என்றால் கோயிலுக்கு போகாதே. பள்ளிவாசல், சர்ச்சுக்கு போகாதே என மு.க.ஸ்டாலினை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ”இது என்ன பொழப்பு. தேவர் ஜெயந்திக்கு போனால் திருநீரை கீழே கொட்டுகிறார்.ஒரு பள்ளிவாசலுக்கு போனால் நோன்பு கஞ்சி குடிக்க கொடுத்தார்கள் என்றால் குடிக்க வேண்டும். குடிக்க மறுத்தால் பள்ளிவாசல் உள்ள போகாதே. சர்ச்சுக்குள் ஸ்வீட் கொடுத்தால் அதை சாப்பிட வேண்டும். பிடிக்கவில்லையா சர்ச்சுக்குள் போகாதே. தேவர் ஜெயந்திக்கு போனால் திருநீறு கொடுப்பது வழக்கம். அங்கு சூடம் காட்டி திருநீறு வழங்குவார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களும் தேவர் ஜெயந்திக்கு போயிருக்கிறார். அவருக்கும் திருநீறு கொடுக்கப்பட்டது. மனதார வாங்கி நெற்றியில் பூசிக் கொண்டார்.

ஸ்டாலினுக்கு திருநீறு பூசிக்கொள்ள பிடிக்கவில்லை என்றால் பக்கத்தில் இருப்பவரிடம் கொடுத்திருக்கலாம். பக்கத்தில் உள்ளவன் கையில் கூட கொடுத்து இருக்கலாம். அதை விடுத்து கோழே கொட்டி தட்டி விடுகிறார். கேட்டால் இது என்னுடைய கொள்கை என்கிறார். இதற்காக நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்கிறார். இருக்கு… வேடிக்கை இருக்கு. ஆப்பு இருக்கு. மாஞ்சோலை பிரச்சினை காரணமாக போராட வந்த தேவேந்திர குல மக்களை தாமிரபரணி ஆற்றுக்குள் மூழ்கடித்து சாகடித்தது தான் திமுக ஆட்சியில்தான். தேவேந்திர குல அப்பாவிகள் எத்தனை பேர் இறந்தார்கள்?

பசும்பொன் தேவர் அய்யா இடத்தில் வந்து திருநீறை தட்டிவிட்டது மட்டுமின்றி, அது கொள்கை சம்பந்தப்பட்டது என்கிறார். என்ன உனக்கு மயிரு கொள்கை இருக்கு. ஸ்டாலினுக்கு என்ன கொள்கை இருக்கிறது? உன்னுடைய மனைவி எல்லா கோயிலுக்கும் செல்கிறார். வீட்டில் நவராத்திரி கொலு நடத்துகிறார். உன் பெயரில் அர்ச்சனை செய்கிறார். நீ மட்டும் அடுத்த ஆள்களை சாமி கும்பிட போகாதே… திருநீர் வைக்காதே… குங்குமம் வைக்காதே… நாமம் போடாதே என கிண்டலும், கேலியும் பேசுகிறாய்.

உங்கள் வீட்டிற்கு புட்டபர்த்தி சாய்பாபா வரும்போது உங்கள் தாயார் தயாளு அம்மாள் சாய்பாபாவிடம் திருநீர் வாங்கிக் கொண்டார். மடிப்பிச்சை போல் வாங்கினார். பக்கத்தில் கலைஞரும் உட்கார்ந்திருந்தார். துரைமுருகன் அண்ணாச்சி கூட ஒரு மோதிரம் வாங்கிக் கொண்டார். என்ன பெரிய நாத்திக மயிறு பேசுகிறீர்கள். நாத்திகன் என்றால் கோயிலுக்கு போகாதே. பள்ளிவாசல், சர்ச்சுக்கு போகாதே. அது ஒரு இடத்துக்கு போறது மற்ற இடத்தை அசிங்கபடுத்துவது? ஒருத்தரை கேவலப்படுத்துவது? ஒருத்தரை திருப்தி படுத்துவதா?”எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்