தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர்களின் சம்பள விவரம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது. இதில் போட்டியாளர்களுக்கு நான் ஒன்றுக்கு எவ்ளோ சம்பளம் வழங்கப்படுகிறது என்ற தகவல் இடம் பெற்றுள்ளது.அதன்பிரகாரம் ரம்யா பாண்டியன், ஆரி, ஜீத்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன் மற்றும் ரியோ ராஜ் ஆகியோருக்கு நாள் ஒன்றுக்கு 2 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது . இவர்களை தொடர்ந்து சனம் ஷெட்டி, சம்யுக்தா கார்த்திக், சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் மற்றும் வேல்முருகன் ஆயோருக்கு நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாகவும் அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது .இதில் பாக்கியுள்ள போட்டியாளர்களான அனிதா சம்பத், கேப்ரியல்லா சார்ல்டன், சோம் சேகர் மற்றும் ஆஜீத் ஆகியோருக்கு ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படுவதாகவும் அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது .ஆயினும் சம்பள தகவல் மிகவும் ரகசியமானது என்பதால் சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது குறித்து தெரியவில்லை.