கொரோனாவால் பிரபல நகைச்சுவை நடிகரஃ மரணம்

  • In Cinema
  • September 24, 2020
  • 347 Views
கொரோனாவால் பிரபல நகைச்சுவை நடிகரஃ மரணம்

பொருளாதார காரணங்களுக்காக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. தமிழக திரைத்துறையில் கருணாஸ், நிக்கி கல்ராணி, நடிகர் விஷால் உள்ளிட்ட பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நலமடைந்துள்ளனர். பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேவேளையில் திரைத்துறையினர் சிலர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

‘புதிய கீதை’ படத்தில் அறிமுகமாகி ‘கயல்’ ‘தொடரி’, ‘வேலையில்லா பட்டாதாரி’,உள்ளிட்ட படங்களில் நடித்த ஃப்ளோரன்ட் பெரைரா சமீபத்தில் கொரோனா பாதித்து உயிரிழந்தார்அவரைத்தொடர்ந்து கில்லி, தூள் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்த ரூபன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘மரியாத ராமண்ணா’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்று தெலுங்கில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த கோசுரி வேணுகோபால் கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு தீவிர மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு தெலுங்கு சினிமா உலகில் கொரோனா குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான மரியாத ராமண்ணா படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார் வேணுகோபால்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்