முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • டேங்கர் லாரியில் கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகள்

    மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக கள்ளநோட்டுக்களை கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ரயில் நிலையத்தில் தண்ணீர் கேன்களை விநியோகிக்க வந்த லாரியை போலீசார் சோதனையிட்டனர். அப்போது அந்த லாரியில் ரூ.7.62 லட்சம் மதிப்பு கள்ளநோட்டு கட்டுகட்டாக பிடிபட்டது. ஆனால், இந்த படம் எப்படி வந்தது என்று எனக்கு தெரியாது என்றும், நேற்று இரவும் லாரியில் தான் தூங்கிக்கொண்டிருந்ததாக டிரைவர் தெரிவித்துள்ளார்.

    READ MORE
  • காருடன் எரிந்த டிரைவர்; திட்டமிட்ட கொலை

    ஒசூர்: ஓசூர் அருகே டிப்பர் லாரி – கார் மோதிக்கொண்ட சாலை விபத்தில் கார் தீப்பற்றி எரிந்து ஓட்டுநர் உயிரிழந்த விவகாரம் திட்டமிட்ட கொலையென போலிசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சானமாவு என்னுமிடத்தில் கடந்த நவம்பர் 11 அன்று டிப்பர்லாரி – கார் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணித்த ஒருப்பெண் மற்றும் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நிலையில், தீப்பற்றி எரிந்த காரில் எச்.செட்டிப்பள்ளியை சேர்ந்த ஓட்டுநர் முரளி என்பவர்

    READ MORE
  • பேருந்து நிலையத்தில் இடையூறாக டூவீலர்கள்

    ஒசூர்: ஓசூர் பேருந்து நிலைய வளாகத்தினுள் பயணிகளுக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் உள்ள அப்பாவு பிள்ளை பேருந்து நிலையத்தில் பேருந்து பயணிகளுக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதாகவும், இதனை மாநகராட்சி அதிகாரிகள் பார்த்தும் கண்டுக்கொள்வதில்லை என புகார் எழுந்துள்ளது. ஓசூர் மாநகராட்சி, என்பது தமிழக மாநில எல்லையில் அமைந்திருப்பதால் வியாபாரம் வணிகம், தொழில் ரீதியாகவும், தினந்தோறும் பெங்களூருவிற்கு வேலைக்கு செல்வோர் பள்ளி,கல்லூரி மாணவர்கள் என ஒரு

    READ MORE
  • ரஜினி, கமலுக்கு அழைப்பு: பா.ஜ., தமிழகத்தில் ஊடுருவும் முயற்சி..! வைகோ பேட்டி..!!

    சென்னை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ., வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் மோடி பிரதமராக பதவேற்க உள்ளார். வரும் 30ம் தேதி மோடி தலைமையிலான அரசு பதவியேற்கவுள்ளது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் முதல்வர் பழனிச்சாமி, நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மதிமுக தலைவர் வைகோ, பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுத்திருப்பது, பா.ஜ., தமிழகத்தில் ஊடுருவ மேற்கொள்ளும் முயற்சி என தெரிவித்துள்ளார்.

    READ MORE
  • மது இல்லாத தென்னகம்; ஜெகன்மோகனுக்கு ராமதாஸ் பாராட்டு!

    சென்னை: மது இல்லாத தென்னகம் அமைய ஆந்திரா மாநிலம் வழிவகுக்கட்டும் என ஜெகன்மோகன் ரெட்டிக்கு ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆந்திரத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவேன். இல்லாவிட்டால் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்ற ஜகன்மோகன் ரெட்டியின் அறிவிப்பு பாராட்டத்தக்கது. துணிச்சலானது. மது இல்லாத தென்னகம் அமைய ஆந்திரம் வழி வகுக்கட்டும்! என பதிவிட்டுள்ளார்.  

    READ MORE
  • வெற்றிபெற்ற எம்எல்ஏ.,க்கள் பெயர்கள் அரசிதழில் வெளியீடு!

    சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டசபை தேர்தல் 18 தொகுக்கும், பின்னர் 4 தொகுகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இதில் 13 தொகுதிகளில் தி.மு.க.,வும், 9 தொகுதிகளில் அ.தி.மு.க.,வும் வெற்றிபெற்றது. இதனைடுத்து, வெற்றிபெற்ற புதிய எம்எல்ஏக்களின் பதவியேற்பு, அவர்களின் பெயர்கள் அரசிதழில் வெளியிட்ட பிறகுதான் என்று சட்டப்பேரவை செயலகம் தெரிவித்திருந்தது. திமுக எம்எல்ஏக்கள் நாளையும், அதிமுக எம்எல்ஏக்கள் நாளை மறுநாளும் பதவியேற்கவுள்ள நிலையில், வெற்றிபெற்ற எம்எல்ஏ.,க்களின் பெயர்களை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு