ஹிரியானா குழந்தை பலி

ஹிரியானா குழந்தை பலி

கர்னால்:

ஹரியானாவில் 50 அடி ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்ட 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பலியானது.

ஹரியானா மாநிலம், கர்னால் பகுதியில் 5 வயது சிறுமி, சுமார் 50 அடி ஆழ்துளை கிணற்றில் தலைகீழாக தவிறி விழுந்தார்.

உடனடியாக அங்கு விரைந்த மீட்புப்படையினர், ஜேசிபி மூலம் பக்கவாட்டில் குழி தோண்டி சிறுமியை இன்று காலை மீட்டனர்.

உடனடியாக அந்த சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

ஏற்கெனவே திருச்சி அருகே 2 வயது சிறுவன் சுர்ஜித் 4 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்