நடிகர் ராமராஜனுக்கு கொரோனா

  • In Cinema
  • September 18, 2020
  • 316 Views
நடிகர் ராமராஜனுக்கு கொரோனா

நடிகர் ராமராஜனுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சென்னை கிண்டியில் உள்ள கிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாள் தோறும் அதிகரித்து வருகிறது. அரசியல் தலைவர்கள், எம்பிக்கள், எல்.எல்.ஏக்கள், திரைப்பிரபலங்கள் என அனைத்து தரப்பினருக்கும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னை கிண்டியில் உள்ள கிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் நலமாக உள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்