ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்தோருக்கு ரூ.15 லட்சம்

ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்தோருக்கு ரூ.15 லட்சம்

உத்தரகண்ட்:

உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான 2 பேரின் குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என உத்தரகண்ட் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருள்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று உத்தரகாஷியில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளதாகவும், ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்