உனா:
பிரச்சாரத்தின்போது பழுதான ஹெலிகாப்டரை, விமான ஓட்டிகள் சரிசெய்தபோது, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உதவிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
மக்களவை தேர்தலுக்கான 6ம் கட்ட வாக்குப்பதிவு நாடுமுழுவதும் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், இமாச்சல் பிரதேசம், உனா பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.
அப்போது, பிரச்சாரத்துக்காக அவர் சென்ற ஹெலிகாப்டரில் பழுது ஏற்பட்டது. ஹெலிகாப்டர் பழுதை விமான ஓட்டிகள் சரிசெய்துகொண்டிருந்தபோது, அவர்களுக்கு உதவியாக ராகுல் காந்தியும் செயல்பட்டார்.
CP : @RahulGandhi Helping get our
helicopter going 🙂 in Una, Himachal Pradesh. pic.twitter.com/JOUuYlj2cV— Congress (@CongressAICC) May 10, 2019
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது.