ரஜினி வராவிட்டால் அவருடைய வாக்குகள் எல்லாம் கமலுக்கே… மக்கள் நீதி மய்யத்தின் அதிரடி ஆருடம்..!

ரஜினி வராவிட்டால் அவருடைய வாக்குகள் எல்லாம் கமலுக்கே… மக்கள் நீதி மய்யத்தின் அதிரடி ஆருடம்..!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தார். “சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றத்துக்காக தமிழக மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். 50 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பெரிய வெற்றியை பெற்று கமல் ஹாசன் முதல்வராகப் பதவியேற்கும் வாய்ப்பு உள்ளது. டாஸ்மாக் விற்றால்தான் அரசுக்கு வருமானம் என்ற நிலையில் உள்ள அதிமுக அரசை அகற்றுவதே மக்கள் நீதி மய்யத்தின் பணி.

நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்தால், அவருடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம்.அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என்பதில் இருவருமே உறுதியாக உள்ளனர். மக்கள் நீதி மய்யம் தனித்துபோட்டியிட வாய்ப்புக்கள் இருந்தாலும், தமிழக மக்களின் நலனுக்காக ஒருமித்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பும் உள்ளது. நீட் தேர்வை முற்றிலும் அகற்றும்போது, மதசார்பற்ற அரசு என்று சொல்லும்போது, தமிழகத்துக்கான ஜி.எஸ்.டி தொகையை முழுமையாக தரும்போது பாஜகவுடன் மக்கள் நீதிமய்யம் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது.

தற்போது ஓட்டு வங்கி என்பதெல்லாம் முற்றிலும் மாறிவிட்டது. எடப்பாடி பழனிசாமியோ மு.க. ஸ்டாலினோ ஆட்சிக்கு வர வேண்டும் என யாரும் விரும்பவில்லை. தீர்மானிக்கப்படாத ஓட்டுக்கள் என்பது தமிழகத்தில் 30 முதல் 40 சதவீதம் வரை உள்ளன. இவை அணைத்தும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக கிடைக்கும். ஒரு வேளை ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் அவருடைய ஆதரவு ஓட்டுகள் மட்டுமல்ல, நடுநிலையாளர்கள் ஓட்டுக்களும் கமல்ஹசனுக்கே கிடைக்கும்” என்று முருகானந்தம் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்