இந்திய அணியில் ரோகித் சர்மா நீக்கம் ஏன்?

  • In Sports
  • October 27, 2020
  • 320 Views
இந்திய அணியில் ரோகித் சர்மா நீக்கம் ஏன்?

ஐபிஎல் போட்டிகள் செம விறுவிறுப்போடு நடைபெற்று வருகின்றன. இதில் தங்கள் திறமையைக் காட்டும் இளம் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு அளிக்கப்படுவது வழக்கம். அதுபோலவே தற்போது நடந்துள்ளது.

நவம்பர் 27 – லிருந்து ஆஸ்திரேலியா – இந்தியா தொடர் தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ள ஆஸ்திரேலியா செல்கிறது இந்திய அணி. அதற்கான வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டிக்கான அணி: விராட் கோலி (கேப்டன்) கே.எல்.ராகுல் (vc & wk), ஷிகர் தவான், , ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹிர்திக் பாண்டியா, மயங் அகர்வால், ரவிந்திர ஜடேஜா, சஹல், குல்தீப் யாதவ், பும்ரா, முகம்மது ஷமி, நவ்தீப் சைனி, தாகூர்டெஸ்ட் போட்டிக்கான அணி: போட்டிக்கான அணி: விராட் கோலி (கேப்டன்) கே.எல்.ராகுல் , ரஹானே (vc), மயங் அகர்வால், ப்ரித்திவ் ஷா, ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், சாஹா (wk), ரிஷப் பண்ட் (wk), குல்தீப் யாதவ், பும்ரா, முகம்மது ஷமி, நவ்தீப் சைனி, ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், முகம்மது சிராஜ்,.

டி20 போட்டிக்கான அணி: விராட் கோலி (கேப்டன்) கே.எல்.ராகுல் (vc & wk), ஷிகர் தவான், , ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, மயங் அகர்வால், ஹிர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன் (wk), ரவிந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், சஹல், பும்ரா, முகம்மது ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், வருண் சக்கரவர்த்தி.

இவர்கள் அல்லாது டெஸ்ட் அணிக்கு கூடுதலாக நடராஜன், நாகர்கோட்டி, இஷால் பெரேல், கார்த்திக் தியாகி ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

இதில் ரோஹித் ஷர்மாவின் பெயர் இல்லாதது பலருக்கும் ஆச்சர்யம் அளிக்கிறது. ஏனெனில், ஐபிஎல் போட்டியில் மட்டுமல்ல மற்ற சர்வதேச போட்டிகளிலும் அவர் சிறப்பாகவே ஆடி வருகிறார். சில தினங்களுக்கு முன் ஐபிஎல் போட்டியில் தசை பிடிப்பு ஏற்பட்டது. அதனால், அவர் கடந்த இரு போட்டிகளில் ஆடவில்லை. இதை வைத்தே ரோஹித் ஷர்மாவில் உடற்தகுதி சரியில்லை என்பதாக பிசிசிஐ முடிவெடுத்துவிட்டதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஏனெனில், அவரின் ஆட்டத் திறன் அடிப்படையில் அவரை நீக்கியிருக்க முடியாது. உடல்நிலை தகுதி அடிப்படையிலேயே ஆஸ்திரேலியத் தொடரிலிருந்துக்கு நீக்கப்பட்டிருப்பார் என்று தெரிகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்