ஹிட்லர் செல்லமாக வளர்த்த முதலை உயிரிழப்பு

ஹிட்லர் செல்லமாக வளர்த்த முதலை உயிரிழப்பு

அடால்ஃப் ஹிட்லருடையது என்று மக்களால் நம்பப்பட்டு வந்த முதலை ஒன்று மாஸ்கோவில் உள்ள உயிரியல் பூங்காவில் இறந்துவிட்டது. சாடர்ன் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்த அந்த முதலைக்கு 84 வயதாகிறது. இந்த முதலை கடந்த வெள்ளியன்று இறந்தது.

இந்த முதலை குறித்து அந்த பூங்கா அதிகாரிகள், “சாடர்ன் அமெரிக்காவில் பிறந்து, பிறகு பெர்லின் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த பூங்காவில் 1943 ஆம் ஆண்டு குண்டு வெடித்தபோது அங்கிருந்து அந்த முதலை தப்பித்தது.

சாடர்ன் முதலை
அதன் பிறகு 1946ஆம் ஆண்டு வரை அதன் இருப்பிடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.அதன் பிறகு பிரிட்டிஷ் வீரர்கள் அதைத் தேடிப்பிடித்து சோவியத் யூனியனிடம் ஒப்படைத்தனர். அந்த முதலை மாஸ்கோவில் விடப்பட்டது. இவ்வாறு ஹிட்லரால் வளர்க்கப்பட்டதாகக் கூறப்பட்டுவந்த அந்த முதலைதான் தற்போது இறந்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்