இந்திய ராணுவ மருத்துவர்கள் 16 ஆயிரம் அடி உயரத்தில் உறையும் பனியில் ராணுவ வீரர் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சம்பவம் கேட்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கிழக்கு லடாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவருக்கு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை சோதனை செய்தபோது அவருக்கு, குடல்வால்வு வீக்கம் இருப்பது தெரிவவந்தது.
ஆனால் லடாக்கில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டதால், அந்த ராணுவ வீரருக்கு ராணுவ மருத்துவர்கள் அங்கேயே அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
ஆனால் தரைமட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில், உறையும் பனியில் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்வது குறித்த சவாலை ராணுவ மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்துமுடித்தனர்.தற்போது அந்த வீரரின் உடல்நிலை சீராக இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
16 ஆயிரம் அடி உயரத்தில், உறையும் பனியில் இந்த அறுவை சிகிச்சையை செய்தது மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.