இந்திய அணியில் இடம் பிடித்த தீபக் சஹார்

  • In Sports
  • October 27, 2020
  • 358 Views
இந்திய அணியில் இடம் பிடித்த தீபக் சஹார்

நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பில்லை என்றாலும் அந்த அணியின் தீபக் சஹாருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது

ஐபிஎல் தொடர் முழுவதும் சூப்பராக பந்துவீசிய தீபக் சஹாருக்கு அடுத்த மாதம் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. அந்த தொடரில் விளையாடவுள்ள டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தீபக் சஹார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

இந்த நிலையில் அடுத்த மாதம் ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் விபரம் தற்போது பின்வருமாறு:

டி20 கிரிக்கெட் அணி: விராத் கோஹ்லி, தவான், மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டெ, ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன், ஜடேஜா, சாஹல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, ஷமி, சயினி, தீபக் சஹார், வருண் சக்கரவர்த்தி,

ஒருநாள் கிரிக்கெட் அணி: விராத் கோஹ்லி, தவான், கில், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, மயங்க் அகர்வால், ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா, ஷமி, சயினி, ஷர்துல் தாக்கூர்,

டெஸ்ட் கிரிக்கெட் அணி: விராத் கோஹ்லி, மயங்க் அகர்வால், பிரித்விஷா, கே.எல்.ராகுல், புஜாரா, ரஹானே, விஹாரி, கில், சஹா, ரிஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாத், பும்ரா, ஷமி, சயினி, உமேஷ் யாதவ், சிராஜ்,

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி விபரம்:

டிசம்பர் 3: முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பைன்

டிசம்பர் 11: இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலைட்

டிசம்பர் 26: மூன்றாவது டெஸ்ட் போட்டி: மெல்போர்ன்

ஜனவரி 3; 4வது டெஸ்ட் போட்டி சிட்னி

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி விபரம்:

ஜனவரி 12: முதல் ஒருநாள் போட்டி

ஜனவரி 15: இரண்டாவது ஒருநாள் போட்டி

ஜனவரி 17: மூன்றாவது ஒருநாள் போட்டி

டி20 போட்டி குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்