சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 31ஆம் நாள், சேஜியாங் மாநிலத்தின் தலைநகர் ஹாங்சோ நகரிலுள்ள சி சி தேசிய சதுப்பு நிலப் பூங்கா மற்றும் ஹாங்சோ நகரின் மின்னணு முறை மேலாண்மை அமைப்பின் தலைமையகம் ஆகியவற்றுக்கு நேரில் சென்றார்.
சி சி சதுப்பு நிலப் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டு நிலைமை, மின்னணு முறை மேலாண்மை அமைப்பைப் பயன்படுத்தி, நகர மேலாண்மை அமைப்புமுறை மற்றும் நிர்வாகத் திறனை நவீனமயமாக்கும் பணிகள் குறித்து ஷிச்சின்பிங் களஆய்வு செய்தார்.