முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

    சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தெற்கு கர்நாடக கடலோர பகுதியையொட்டி, கிழக்கு மத்திய வங்கக்கடலில் வளி மண்டல சுழற்சி நிலவிவருகிறது. இதன் காரணமாக தென்னிந்தியாவில் அடுத்த 3 நாட்களுக்கு ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    READ MORE
  • பேரறிவாளன் மனுவை ஏற்றது சுப்ரீம்கோர்ட்

    புதுடெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். மேலும், 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தமிழக ஆளுநரின் முடிவுக்காக நீண்ட காலமாக காத்திருக்கிறது. இந்நிலையில், ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்கக்கோரிய மனுவை கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என

    READ MORE
  • பள்ளிப் பேருந்துகள் பறிமுதல்

    ஒசூர்: ஓசூரில் முறையான ஆவணங்கள் இன்றி ஆபத்தான நிலையில் பேருந்துகளை இயக்கிய தனியார் பள்ளியின் பேருந்துகளை வட்டார போக்குவரத்து போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயக்கோட்டை சாலையில் ஒன்னல்வடி பகுதியில் உள்ள சுவாதி என்கின்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு மாணவர்களை அழைத்துவரும் பேருந்துகளுக்கு முறையான ஆவணங்கள் ஏதும் இன்றி பேருந்துகள் மிக மோசமான நிலையில் உள்ளதாக ஓசூர் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு வந்தது. புகாரின் பேரில்

    READ MORE
  • தமிழகத்தில் சூறைகாற்றுடன் மழை: வானிலை ஆய்வு மையம்

    சென்னை: தமிழகத்தின் சில இடங்களில் பலத்த சூறைகாற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக கடும் வெயிலால் அவதிபட்டுவந்த நிலையில், பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சில இடங்களில் சூறைகாற்றுடன் கனமழை பெய்யும். 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறைகாற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    READ MORE
  • லாட்டரி அதிபர் உதவியாளர் மரணம்; விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

    சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் பழனிச்சாமி மரணம் குறித்து விரிவான அறிக்கை அளிக்க காவல் துறைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 30ம் தேதி, லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும், அவரது நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களிடமும் தொடர் விசாரணை நடத்தினர். மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரி காசாளரான பழனிச்சாமியிடம் வருமானவரித்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கடந்த 3ம் தேதி, வெள்ளியங்காட அருகே ஒரு குட்டையில் பழனிச்சாமி பிணமாக

    READ MORE
  • சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி கோரும் ஸ்டாலின்

    சென்னை: கோவையிலிருந்து 50 வாக்குப்பதிவு இயந்திரங்களை இரவோடு இரவாக தேனிக்கு மாற்றப்பட்ட நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பதில் தமிழகத்தில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருகின்றன. ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் இயந்திரங்களை மாற்றப்பட்டது கண்டனத்துக்கு உரியது. தமிழக தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ளது. எதிர்க்கட்சிகள் தலைமை தேர்தல்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு