பேரறிவாளன் மனுவை ஏற்றது சுப்ரீம்கோர்ட்

பேரறிவாளன் மனுவை ஏற்றது சுப்ரீம்கோர்ட்

புதுடெல்லி:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். மேலும், 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தமிழக ஆளுநரின் முடிவுக்காக நீண்ட காலமாக காத்திருக்கிறது.

இந்நிலையில், ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்கக்கோரிய மனுவை கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு நீதிபதி ரமணா அமர்வில் இன்று முறையிட்டார்.

இதனை ஏற்ற நீதிபதி என்.வி.ரமணா, வழக்கு பட்டியலில் இருந்து நீக்கப்படாது எனவும், நவம்பர் 5ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்