சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி கோரும் ஸ்டாலின்

சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி கோரும் ஸ்டாலின்

சென்னை:
கோவையிலிருந்து 50 வாக்குப்பதிவு இயந்திரங்களை இரவோடு இரவாக தேனிக்கு மாற்றப்பட்ட நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பதில் தமிழகத்தில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருகின்றன. ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் இயந்திரங்களை மாற்றப்பட்டது கண்டனத்துக்கு உரியது.

தமிழக தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ளது. எதிர்க்கட்சிகள் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு மீதான நம்பிக்கையை இழந்துவிட்டன. தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது கவலை அளிக்கிறது.

46 வாக்குச்சாவடிகளில் தவறு நடந்துள்ளதாகவும், மறு வாக்குப்பதிவுக்கு வாய்ப்புள்ளதாகவும் சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். அங்கு நடந்த தவறுகள் என்ன என்ற விவரஙகளை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.
வாக்குப்பதிவு இயந்திரகளையும் மையங்களையும் பாதுகாக்க சிறப்பு தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்