முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

    சேலம்: கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக கபினி உள்ளிட்ட அணைகளின் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கர்நாடக அணைகளிலிருந்து 25 ஆயிரம் கனஅடிக்கும் மேலாக உபரி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. ஒகேனேகல் காவிரி ஆற்றில் 34 ஆயிரம் கனஅடி நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 8,347 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 34,722 கனஅடியா நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் நேற்று 113.03 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம்

    READ MORE
  • பணப்பட்டுவாடா: திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

    நாங்குநேரி: நாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடாவுக்கு பணம் வைத்திருந்ததாக திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்ததையடுத்து, அங்கு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது நாங்குநேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட அம்பலம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவாக கிராம மக்கள் புகாரின் பேரில் திமுக எல்எல்ஏ சரவணகுமார் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும்,

    READ MORE
  • 100 நாள் வேலை 150ஆக உயர்த்தப்படும்

    விக்கிரவாண்டி: திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைவாயப்புத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தப்படும் என மு.க.ஸ்டாலின் தெரவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தப்படும் என தெரிவித்தார். மேலும் தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குதிகள் உண்மை, ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் நிறைவேற்றப்படும் எனவும், தமிழகத்தில் கொல கொள்ள

    READ MORE
  • ‘‘7 பேர் தமிழர்கள் அல்ல கொலையாளிகள்’’ என கூறிய கே.எஸ்.அழகிரிக்கு ராமதாஸ் பதிலடி!

    சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை எதிர்த்த மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், விடுதலை குறித்து ஆளுநரே முடிவெடுக்கலாம் என இந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டியில், ‘‘28 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழர்கள் என கூறக்கூடாது; கொலையாளிகள் என்று தான் கூற வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார். இந்த

    READ MORE
  • ஏழு பேர் விடுதலைக்கு அதிமுக தொடர்ந்து வலியுறுத்தும்: ஓ.பன்னீர்செல்வம்

    சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநரை, அதிமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம். 4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என தெரிவித்தார். மேலும், ஏழு பேரின்

    READ MORE
  • சம்மன் அனுப்பியும் ஆஜராகத நடிகர் விஷால்!

    காஞ்சிபுரம்: நடிகர் சங்க நிலம் தொடர்பான விசாரணையில் சம்மன் அனுப்பியும் நடிகர் விஷால் ஆஜராகவில்லை. தென்னிந்திய நடிகர் சங்க நிலம் தொடர்பான விசாரணைக்கு நடிகர் விஷால் ஆஜராகும் படி காஞ்சிபுரம் மாவட்டம் குற்றப்பிரிவு அலுவலகத்திலிருந்து சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், இன்று நடைபெறும் விசாரணைக்கு நடிகர் விஷால் ஆஜராகவில்லை. படப்பிடிப்பில் இருப்பதால் வேறு ஒரு நாளில் ஆஜராவதாக அவர் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு