தியேட்டரில் வெளியாகும் முதல் திரைப்படம்

  • In Cinema
  • October 10, 2020
  • 289 Views
தியேட்டரில் வெளியாகும் முதல் திரைப்படம்

ஆறு மாதங்களாக பூட்டிக்கிடந்த திரையரங்குகள் அக்டோபர் 16ம் தேதியிலிருந்து திறப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் விஜய் சேதுபதி படத்தின் போஸ்டரில் 16ஆம் தேதி முதல் தியேட்டரில் என்று வெளியாகியுள்ளது தியேட்டர்கள் திறக்கப்படுவதை உறுதி செய்துள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் க/பெ. ரணசிங்கம்.OTTயில் இதுவரை வெளிவந்த படங்களில் அதிக வசூல் செய்த படமாக க/பெ. ரணசிங்கம் வெற்றி நடை போட்டு வருகிறது.

இந்நிலையில் இதே படத்தை அக்டோபர் 16ஆம் தேதி தியேட்டர் திறந்ததும் முதல் படமாக வெளியிட உள்ளார்களாம். ஏற்கனவே அனைவரும் பார்த்து விட்டதால் தியேட்டரில் கூட்டம் வருமா என்பது சந்தேகம்தான்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்