பள்ளிப் பேருந்துகள் பறிமுதல்

பள்ளிப் பேருந்துகள் பறிமுதல்

ஒசூர்:

ஓசூரில் முறையான ஆவணங்கள் இன்றி ஆபத்தான நிலையில் பேருந்துகளை இயக்கிய தனியார் பள்ளியின் பேருந்துகளை வட்டார போக்குவரத்து போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயக்கோட்டை சாலையில் ஒன்னல்வடி பகுதியில் உள்ள சுவாதி என்கின்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளிக்கு மாணவர்களை அழைத்துவரும் பேருந்துகளுக்கு முறையான ஆவணங்கள் ஏதும் இன்றி பேருந்துகள் மிக மோசமான நிலையில் உள்ளதாக ஓசூர் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு வந்தது.

புகாரின் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஈஸ்வர மூர்த்தி தலைமையில் வாகன மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயகுமார் மற்றும் தரணீதரன் ஆகியோர் சென்று பேருந்துகளை ஆய்வு செய்தபோது பேருந்துகளுக்கான ஆவணங்கள் ஏதும் இன்றி இயக்கி வருவது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மூன்று பேருந்துகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் சிப்காட் மற்றும் மத்திகிரி காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டு நடவடிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். பலமுறை இதே பள்ளியில் பள்ளியில் பேருந்துகளை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் இதுபோன்ற பிஞ்சு குழந்தைகளை அழைத்துச் செல்ல பயன்படுத்தும் குழந்தைகளை அழைத்துச் செல்ல பயன்படுத்தும் வாகனங்கள் மோசமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனைத்து தனியார் பள்ளி வாகனங்களையும் முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்