குஜராத்தில் ஒரு தேசிய பூங்காவில் பச்சைக் கிளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி விளையாடிய காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
‘பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு..’ குஜராத்தில் கிளிகளுடன் விளையாடிய பிரதமர் மோடி
குஜராத்தில் புதிய திட்டங்களை தொடங்குவதற்காக பிரதமர் மோடி இரு நாட்கள் பயணமாக அந்த மாநிலத்திற்கு சென்றுள்ளார். நர்மதா மாவட்டத்தில் ஒற்றுமையின் சிலை உள்ளது.
இந்த சிலை அருகே சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக 17 முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆரோக்கிய வேன், ஏக்தா மால், குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்கா, சர்தர் வல்லபாய் படேல் பூங்கா அல்லது ஜங்கிள் சஃபாரி, நர்மதை நதியில் படகு சவாரி உள்பட 17 திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.அப்போது அங்கு இருந்த பச்சைக் கிளிகளுடன் மோடி கொஞ்சி விளையாடினார். கைகளின் மணிக்கட்டில் கிளிகளை ஏந்திய மோடி சிரித்து சிறு குழந்தை போல் விளையாடி மகிழ்ந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.