முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • கார் எரிப்பு; பலி எண்ணிக்கை 2 ஆனது

    ஒசூர்: ஓசூர் அருகே கூலிப்படையினரால் காரினை டிப்பர் லாரியால் மோத வைத்து பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சானமாவு என்னுமிடத்தில் நவம்பர் 11 அன்று, கார் – டிப்பர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்தது இதில் கார் ஓட்டுநர் முரளி என்பவர் உடல்கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வெறும் சாலை விபத்தாக மட்டுமே பார்க்கப்பட்ட நிலையில், விபத்தில் சிக்கிய மதுரையை சேர்ந்த டிப்பர் லாரி

    READ MORE
  • ஆபத்தான மின் கம்பம்; அதிகாரிகள் அலட்சியம்

    ஒசூர்: தேன்கனிக்கோட்டை அருகே ஆபத்தான மின் கம்பம் குறித்து புகாரளித்தும் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஒசூர் அருகே உள்ள அஞ்செட்டி – தேன்கனிக்கோட்டை சாலையின் 5வது கிலோமீட்டரில் மின் கம்பம் ஒன்று விழும் நிலையில் உள்ளது. இதன் அடியில் மூங்கில் வளர்ந்து கம்பிகளுக்கு அடியில் உயர்ந்து நிற்கிறது. அருகில் உள்ள நீர் குட்டையில் சிமெண்ட் மின்கம்பம் ஒன்று கம்பிகள் வெளியே தெரியும்படி பழுதடைந்துள்ளது. இந்த பகுதியில் யானைகள் வரும் பாதை என்பதால், மின்

    READ MORE
  • சாலையை மறித்து சுவர்; பொதுமக்கள் அவதி

    ஒசூர்: ஓசூர் அருகே லே அவுட் போட்டிக்களில் ஒரு பகுதியினர் பொதுப்பாதையை மறித்து சுற்றுச்சுவர் கட்டியுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேகேப்பள்ளி என்னுமிடத்தில் அடுத்தடுத்த இரண்டு லே – அவுட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, அவற்றில் பொதுப்பாதையை காண்பித்தே அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதில் ஒருப்பிரிவினர், ஆவணத்தில் காட்டப்பட்ட பொதுப்பாதையை மறித்து சுற்றுசுவர் எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் மடிவாளம், நெல்லூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய பொதுப்பதையும் ஜேசிபி வாகனம் கொண்டு குழித்தோண்டப்பட்டிருப்பதால், குடியிருப்பு வாசிகளும்

    READ MORE
  • எம்எல்ஏ., பதவியை  ராஜினாமா செய்த வசந்தகுமார்!

    சென்னை: நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் எச்.வசந்தகுமார் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை சபாநாயகர் தனபாலிடம் அளித்தார். இவர் கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றதையடுத்து, இந்த எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

    READ MORE
  • 9 அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு!

    சென்னை: நடந்துமுடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேரும் இன்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர். தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில், 9 பேருக்கும் சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

    READ MORE
  • முறைகேட்டில் ஈடுபட்டால் தகுதி நீக்கம்..! – ஆசிரியர் தேர்வு வாரியம்

    சென்னை: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம் நடைபெறுகிறது. ஜூன் 8ம் தேதி முதல் தாள் தேர்வும், ஜூன் 9ம் தேதி 2ம் தாள் தேர்வும் நடைபெறுகிறது. காலை 10 மணிமுதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த தேர்வுகளில், முறைகேட்டில் ஈடுபட்டாலோ அல்லது தடை செய்யப்பட்ட பொருட்களை, தேர்வு அறைக்குள் எடுத்துச்சென்றாலோ தேர்விலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு