கார் எரிப்பு; பலி எண்ணிக்கை 2 ஆனது

கார் எரிப்பு; பலி எண்ணிக்கை 2 ஆனது

ஒசூர்:

ஓசூர் அருகே கூலிப்படையினரால் காரினை டிப்பர் லாரியால் மோத வைத்து பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சானமாவு என்னுமிடத்தில் நவம்பர் 11 அன்று, கார் – டிப்பர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்தது இதில் கார் ஓட்டுநர் முரளி என்பவர் உடல்கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வெறும் சாலை விபத்தாக மட்டுமே பார்க்கப்பட்ட நிலையில், விபத்தில் சிக்கிய மதுரையை சேர்ந்த டிப்பர் லாரி ஓட்டுநரிடம் போலிசார் நடத்திய விசாரணையில் சினிமாவை மிஞ்சிய தகவல்கள் புருவத்தை உயர்த்த வைத்தன

ஓசூரில் வசித்து வரும் ஆனந்தபாபு – நீலிமா தம்பதிகள் புதியதாக தொழில் ஒன்றை தொடங்க முயற்சி மேற்க்கொண்டபோது நெருங்கிய உறவினரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பை மீறி தம்பதிகள் தொழில் தொடங்க மும்முரம் காட்ட தொடங்கியதையடுத்து,இவர்களை தீர்த்துக்கட்ட மதுரையிலிருந்து கூலிப்படை வரவழைக்கப்பட்டு தம்பதிகளின் காரினை மர்மநபர்கள் மூலம் கண்காணித்து சானமாவு என்னுமிடத்தில் இடித்து பெட்ரோல் குண்டு வீசி சாலை விபத்தைப்போல் சித்தரிக்க திட்டமிட்டுள்ளனர்.

காரினுள் ஆனந்தபாபு அவசர வேலையாக இறங்கிவிட ஓட்டுநர் முரளியுடன் நீலிமா மற்றும் மகள் மட்டும் வந்துள்ளனர். காரினை திட்டத்தின்படி டிப்பர் லாரினை கொண்டு மோதி உள்ளனர்,பின்பு மறைந்திருந்தவர்கள் காரின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தீப்பற்ற செய்துள்ளனர், காரினுள் இருந்த நீலிமாவை அப்பகுதியினர் காயங்களுடன் தீக்காயங்களுடன் மீட்டுவிட ஓட்டுநர் முரளி உடல்கருகி பலியானார். மீட்கப்பட்ட நீலிமா தீவிர சிகிச்சைப்பிரிவில் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில் அவரும் இன்று மாலை (நவம்பர் 21) பரிதாபமாக உயிரிழந்தார், இதனால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

இந்த வழக்கினை தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா தலைமையிலான தனிப்படையினர், மதுரையை சேர்ந்த கூலிப்படையில் ஒருவனும் டிப்பர்லாரியை ஓட்டிவந்த மகாராஜா என்பவனிடம் 3 நாட்களாக தொடர்ந்து நடைப்பெற்ற விசாரணையில், உண்மை வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, சாலை விபத்து கொலைவழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூன்று நாட்களுக்கு முன்பாக டிப்பர்லாரி ஓட்டுநர் மகாராஜா சேலம் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டான், கூலிப்படை மகாராஜாவின் கூட்டாளிகளுக்கு தனிப்படை வலைவீசி வந்தநிலையில், தம்பதிகளின் காரினை நோட்டமிட்டு தகவல் அளித்து கொலை சம்பவத்திற்கு உதவியதாக கங்காபுரம் கிராமத்தை சேர்ந்த ஆனந்த், மற்றும் சாந்தக்குமார் ஆகிய இருவரை இன்று தனிப்படை போலிசார் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

ஓட்டுநர் உட்பட இதுவரை கொலை சம்பவத்திற்க்கு காரணமானவர்களாக மூவரை கைது செய்யப்பட்டுள்ளனர், கொலை செய்ய திட்டமிட்டு பெட்ரோல் குண்டு வீசிய கூலிப்படையை கூண்டோடு பிடிக்க தனிப்படை மதுரைக்கு விரைந்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்