முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • தீபத்திருவிழாவுக்கு சிறப்பு பேருந்துகள்

    திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு 2,500 சிறப்பு பேருந்து இயக்கவுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, வரும் 10ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரண தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படுகிறது. வரும் 1ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி, தமிழகம் முழுவதிலும் இருந்து 2,500 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    READ MORE
  • பல்வேறு திட்டபணிகள் துவக்கம்

    ஒசூர்: தளி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு திட்டப்பணிகளை எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், தளி சட்டமன்றத் தொகுதி தளி தெற்கு ஒன்றியம் ஜவளகிரி கிராமத்தில் ரூ.1 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய், அகலகோட்டை ஊராட்சி மரகரதொட்டி கிராமத்தில் ரூ.2.80 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்கூடம், சாரண்டப்பள்ளி ஊராட்சி நேரிலட்டி கிராமத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை, சாரண்டப்பள்ளி கிராமத்தில் ரூ.2 லட்சம் மதிப்பில் 2 பாலங்களுக்கான பணிகளை தளி எம்.எல்.ஏ., ஒய்.பிரகாஷ்

    READ MORE
  • ஒசூரில் வாகன ஓட்டிகள் அவதி

    ஒசூர்: ஓசூர் மாநகராட்சியில் தோண்டப்பட்ட சாலைகள் 3 மாதங்களாக சரிசெய்யப்படாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி,தமிழகத்தில் அண்மையில் உருவான 14 வது புதிய மாநகராட்சி மாவட்டத்தின் தலைநகரமல்லாத முதல் மாநகராட்சி என்கிற சிறப்புக்குறியது. ஓசூர் மாநகரில் உள்ள முக்கிய சாலைகள் குண்டும்குழியுமாக இருந்தநிலையில், சாலைகளை விரிவுப்படுத்தவும் சீரமைக்கவும் ஒப்பந்ததாரர்கள் மூன்று மாதங்களுக்கு முன்பாக சாலையை தோண்டி உள்ளனர். ஓசூர் மாநகர் இராயக்கோட்டை சாலை, இரயில்வே நிலைய சாலை,பாகலூர் சாலை ஆகிய

    READ MORE
  • கல்பனா சாவ்லா விருது..! விண்ணப்பங்கள் வரவேற்பு..!

    சென்னை: தமிழக அரசின் துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு, தகுதியுடைய பெண்கள் ஜூன் 30ம் தேதிக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுக்கான தகுதியானவர்களை தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தேர்வுசெய்யப்படுவார்கள் என தமிழக அரசு அளிவித்துள்ளது. கல்பனா சாவ்லா விருது என்பது ஆண்டுதோறும் தமிழக அரசு அளிக்கும் விருதுகளில் ஒன்றாகும். இந்தியாவில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற விண்வெளி வீரங்கனை கல்பனா சாவ்லாவின் நினைவாக தமிழ்நாட்டில்

    READ MORE
  • நாங்குநேரி தொகுதி காலி; அரசாணை வெளியீடு!

    சென்னை: தமிழக சட்டப்பேரவை தொகுதி காலியாக உள்ளது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், கன்னியாக்குமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் எச்.வசந்தகுமார் வெற்றிபெற்றதையடுத்து, நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை சபாநாயகர் தனபாலிடம் அளித்தார். இதனையடுத்து, நாங்குநேரி தொகுதி காலியாக உள்ளது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் நாங்குநேரியில் இடைத் தேர்தல் நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    READ MORE
  • காங்., பேரணியில் தொண்டர் தீக்குளிக்க முயற்சி!

    சென்னை: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்ததையடுத்து, ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உறுதியுடன் இருப்பதால், பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தி தொடர்ந்து வழிநடத்தக்கோரி, சென்னை தேனாம்பேட்டையில் தமிழக காங்கிரஸ் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில், திடீரென தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். அவரை காங்கிரஸ் தொண்டர்கள் தடுத்து நிறுத்தி

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு