முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • புதினா விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

    ஒசூர்: ஓசூர் பகுதிகளில் புதினா தோட்டத்திலேயே ஒருக்கட்டு புதினா 15 ரூபாய்க்கு வாங்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதிகளில் புதினா விளைச்சல் குறைந்திருப்பதால், 15 ரூபாய்க்கு ஒருக்கட்டு புதினாவை விவசாயிகளிடமே பெற்றுவருவதால் நல்ல லாபம் கிடைத்து வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஓசூர் சுற்றுப்பகுதி சீரான சீதோசன நிலை நிலவுவதாலும், நல்ல மண் வளம் இருப்பதால் மலர், பழவகைகள்,கீரை உள்ளிட்டவைகள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில்

    READ MORE
  • ‘‘வழக்கு போட்டால் கொன்னுடுவேன்’’

    மதுரை: நாம் தமிழர் கட்சியான எங்கள் மீது வழக்கு போட்டால் அதிகாரத்துக்கு வந்தால் கொன்றுவிடுவேன் என சீமான் கொந்தளித்துள்ளார். மதுரையில் நடந்த மாவீரர் நாள் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், நாம் தமிழர் கட்சியின் போஸ்டர்களை கிழிப்பவர்களும், தம்பிகள் மீது வழக்கு போடுபவர்கள் எல்லோரும் தாம் ஆட்சிக்கு வருவதற்குள் இறந்துவிடுங்கள் என்றும், இல்லையேல், அவர்களை கொன்றுவிடுவேன் என்றும் அவர் பேசியுள்ளார். மேலும், தங்கள் மீது வழக்கு போடுபவர்கள் மற்றும்

    READ MORE
  • ஸ்டாலின் எதை எதையோ பேசுகிறார்: அமைச்சர் அன்பழகன்

    ஒசூர்: தமிழக மக்கள் முக.ஸ்டாலினை மறந்துவிடுவார்கள் என்பதனாலே எதை எதையோ பேசி வருகிறார்என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகர விளையாட்டுத்திடலில், ஓசூர் கோட்டத்திற்குட்பட்ட ஓசூர்,சூளகிரி,தேன்கனிக்கோட்டை,அஞ்செட்டி ஆகிய நான்கு தாலூகாவிற்குட்பட்ட பொதுமக்களிடம், முதலமைச்சரின் சிறப்புக்குறைத்தீர்க்கும் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் தகுதியுடைய பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் தலைமையில் நடைப்பெற்ற விழாவில், தமிழகத்தின் உயர்க்கல்வித்துறை அமைச்சர் கேபி.அன்பழகன் பங்கேற்று 3683 பயணாளிகளுக்கு வீட்டுமனை பட்டா,முதியோர்

    READ MORE
  • எம்.பி.பி.எஸ். படிப்புக்கான விண்ணப்பங்கள் இணையத்தில் வெளியீடு.! அமைச்சர் தகவல்.!

    சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: நெல்லை மருத்துவ கல்லூரியில் 150 மருத்துவ படிப்பு இடங்களை 250 ஆக அதிகரித்து இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. கரூர் புதிய மருத்து கல்லூரிக்கு 150லிருந்து 250 இடங்கள் அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு வாய் மொழி உத்தரவு அளித்துள்ளது. தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் 3 ஆயிரம் இடங்கள் உள்ளன. தற்போது 3

    READ MORE
  • தமிழகத்தில் 100 டிகிரி தாண்டிய வெப்பம்!

    சென்னை: கத்திரி வெயில் முடிந்த நிலையிலும், தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சில இடங்களில் மிதமான மழை பெய்தும் வெப்பம் தணிந்ததில்லை. இந்நிலையில், தமிழகத்தில் 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியள்ளது. வேலூர், திருத்தணி – 108, மதுரையில் 105, பாளையங்கோட்டை, மதுரை தெற்கு – 104, கடலூரில் 103, திருச்சி, சென்னை மீனம்பாக்கத்தில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    READ MORE
  • தமிழகத்தில் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

    சென்னை: தமிழகத்தில் 19 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சீமா அகர்வால் – காவல்துறை தலைமையிட ஏடிஜிபி, அபாஷ்குமார் – தமிழ்நாடு சிறைத்துறை ஐ.ஜி., ஜெயந்த் முரளி – சென்னை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ராஜேஸ்வரி – சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., அசோக்குமார்தாஸ் – சென்னை தொழில் நுட்ப பிரிவு ஏடிஜிபி செந்தாமரைக்கண்ணன் – காவல்தலைமையக ஐ.ஜி., சங்காராம் ஜாங்கிட் – கும்பகோணம் போக்குவரத்து கழக தலைமை

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு