முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • தடை செய்யப்பட்ட மீன்கள் லாரியுடன் பறிமுதல்

    ஒசூர்: ஓசூர் அருகே, அண்டை மாநிலத்திற்கு கடத்தவிருந்த தமிழக அரசால் தடைவிதிக்கப்பட்ட 3 டன்கள் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள வருவாய்த்துறையினர் லாரியுடன் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பத்தளப்பள்ளி என்னுமிடத்தில் மத்திய,மாநில அரசுகள் தடைவிதித்த ஆப்ரிக்கன் வகை கெளுத்தி மீன்களை லாரியில் கர்நாடகாவிற்கு கடந்தப்படுவதாக வந்ந இரகசிய தகவலின் அடிப்படையில் வருவாய்த்துறையினர் மீன்களை ஏற்றிவந்த லாரியை பறிமுதல் செய்து, லாரியினுள் இருந்த 3 டன் எடையிலான மீன்களை பொதுமக்கள் நடமாட்டம் குறைந்த இடத்தில் ஜேசிபி

    READ MORE
  • மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகு கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கோவில் முழுவதும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் சோதனையிட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணியில் கூடுதலாக 360 போலீசார் அமர்த்தப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசிர்வாதம் தெரிவித்துள்ளார்.

    READ MORE
  • டெல்லியில் வைகோ கைது

    புதுடெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்திய வைகோ கைதுசெய்யப்பட்டார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று டெல்லிக்கு வருகிறார். இந்தியா வரும் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் வருகையை எதிர்த்து டெல்லியில் வைகோ தலைமையில் மதிமுகவினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்திய வைகோ கைது செய்யப்பட்டார்.

    READ MORE
  • தலைமை செயலக ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு!

    சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் ஆடை அணிவதில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தமிழக அரசு வெளியிட்டுள் ஆணையில், தலைமைச் செயலக அரசு ஊழியர்களுக்கான பணியார்கள் ஆடை அணிவதில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதில், தரமானதாகவும், சுத்தமானதாகவும் ஆடைகளை அணிய வேண்டும். அலுவலகத்தின் நன்மதிப்பை பராமரிக்கும் வகையில் ஆடைகள் இருக்க வேண்டும் என அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பெண் ஊழியர்கள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் ஆகிய ஆடைகளை

    READ MORE
  • ‘‘எதையும் திணிக்கக்கூடாது; விருப்பமுள்ளவர்கள் கற்கலாம்’’ கமல்ஹாசன் பேட்டி!

    சென்னை: மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயம் என மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. இகுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவிக்கையில், நான் இந்தி படத்தில் நடித்தவன்; எதையும் திணிக்க கூடாது என்பது என்னுடைய கருத்து. விருப்பமுள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தள்ளார். மேலும் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது தமிழகத்திற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறுவது, தேர்தல் வாக்குறுதி போல் உள்ளது. தமிழகத்திற்கு மத்திய அமைச்சர் வாய்ப்பு இல்லை என்பதாக தான்

    READ MORE
  • மின்வாரியத்தில் வெளிமாநிலத்தவர்கள் தேர்வு.. வைகோ கடும் கண்டனம்.!

    தமிழக மின்சார வாரியத்தில் வெளிமாநிலத்தவர்களை தேர்வு செய்தது மிகப்பெரிய கண்டனத்துக்குரியது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மின்வாரிய உதவிப்பொறியாளர்கள் தேர்வில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை தேர்வு செய்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. மேலும், அரசுப்பணிகள் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு 100 சதவீதம் பணி கிடைக்க சட்டத்தை இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு