முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • மேலும் 3 மருத்துவக்கல்லூரிக்கு ஒப்புதல்

    புதுடெல்லி: தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தல் கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் நாகையில் புதியதாக மருத்துவக்கல்லூரிகள் தொடங்க தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் நாகையில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமத வழங்கியுள்ளது.

    READ MORE
  • தடை செய்யப்பட்ட மீன்கள் வளர்ப்பு

    ஓசூர்: தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெலுத்தி மீன்கள் அதிகளவில் வளர்க்கப்படுவதால் மீன்வளத்துறையால் வளர்க்கப்படும் மீன்களை வாங்க ஆர்வம் குறைந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணை அருகே மீன் விதைப்பண்ணை மூலம், மீன்வளத்துறை சார்பில் 10 தொட்டிகள் மூலம் மீன் வளர்க்கப்பட்டு வருகிறது. சிசி, கட்லா, மிருகல், ரோகு ஆகிய 4 வகை மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு, மீன் வளர்ப்புக்காக விவசாயிகளுக்கு ஒருமீன் குஞ்சு 60 பைசா ரூபாயில் விற்க்கப்படுகிறது. அவ்வாறு வளர்க்கும் மீன்கள்

    READ MORE
  • குறைமாத பிரசவம்; டாக்டர்களுக்கு நன்றி

    ஒசூர்: ஒசூரில் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு மலை கிராம தம்பதி நன்றி தெரிவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் குறைப்பிரசவத்தில் 830 கிலோ கிராம் எடையுடன் பிறந்த ஆண் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் ஓசூர் அரசு மருத்துவமனை பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது. அரசு மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் தற்போது குழந்தையின் எடை 1,160 கிலோ கிராமாக அதிகரித்து நலமுடன் உள்ளது. இதனால் குழந்தையின் பெற்றோர் அரசு

    READ MORE
  • ‘‘8 வழிச்சாலைக்கு எதிரான சட்டப்போராட்டம் தொடரும்’’ – அன்புமணி ராமதாஸ்

    சென்னை: சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிரான பாமகவின் சட்டப் போராட்டம் தொடரும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் கூறுகையில், மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதன் மூலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை கைவிடச் செய்ய பாமக போராடும். இந்த திட்டத்திற்கு எதிரான சட்டப்போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார். –

    READ MORE
  • 8 வழிச்சாலை திட்டம்: மேல்முறையீட்டை திரும்ப பெறவேண்டும்; – மு.க.ஸ்டாலின்

    சென்னை: சென்னையிலிருந்து சேலம் வரையிலான 8 வழிச்சாலைக்க உயர்நீதிமன்றம் தடைவிதித்த நிலையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 8 வழிச்சாலை திட்டத்திற்காக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு செய்த மேல்முறையீட்டை திரும்பப் பெற வேண்டும். இத்திட்டத்தை நிறைவேற்ற மேல்முறையீடு செய்திருப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகமாகும். மேலும், தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் பதவி கூட தராமல் மோடி அரசு அவமதித்துள்ளது. தமிழக மக்களின் வாழ்வாதாரத்துடன் பாஜக அரசு

    READ MORE
  • நாங்குநேரி காலி..! தலைமை தேர்தல் ஆணையத்திடம் தகவல்..!!

    சென்னை: நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாக்குமரி தொகுதியில் போட்டியிட்ட, நாங்குநேரி எம்எல்ஏ., வசந்தகுமார் வெற்றிபெற்று எம்.பி., ஆனார். இதனையடுத்து, எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து, அந்த இடம் காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்தார். நாங்குநேரி தொகுதி காலியானது குறித்து, சட்டப்பேரவை செயலாளர் அளித்த கடிதத்தை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவிட்டதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு