தடை செய்யப்பட்ட மீன்கள் வளர்ப்பு

தடை செய்யப்பட்ட மீன்கள் வளர்ப்பு

ஓசூர்:

தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெலுத்தி மீன்கள் அதிகளவில் வளர்க்கப்படுவதால் மீன்வளத்துறையால் வளர்க்கப்படும் மீன்களை வாங்க ஆர்வம் குறைந்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணை அருகே மீன் விதைப்பண்ணை மூலம், மீன்வளத்துறை சார்பில் 10 தொட்டிகள் மூலம் மீன் வளர்க்கப்பட்டு வருகிறது.

சிசி, கட்லா, மிருகல், ரோகு ஆகிய 4 வகை மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு, மீன் வளர்ப்புக்காக விவசாயிகளுக்கு ஒருமீன் குஞ்சு 60 பைசா ரூபாயில் விற்க்கப்படுகிறது.
அவ்வாறு வளர்க்கும் மீன்கள் வளர்ப்பவர்களே விற்றுக்கொள்ளலாம். ஓசூர் சுற்றுப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான மீன்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு இடத்திலும் அரசின் சார்பில் வளர்க்கப்படும் மீன்குஞ்சுகள் வாங்கப்படவில்லை.

மீன்வளர்ப்போரிடம் தெரிவிக்கையில் அதிர்ச்சி அளிக்கும் தகவலை தெரிவிக்கின்றனர்: முன்பை,கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெலுத்தி எனப்படும் மீன் குஞ்சுகள் வாங்கி வறப்பட்டு வளர்ப்பவதாகவும், இத்தகைய மீன்களை வளர்க்க வீணாகும் இறைச்சிக்கடை கழிவுகள், கோழிகழிவுகள் உள்ளிட்டவை உணவாக வழங்குவதாகவும், ஆப்ரிக்கன் கெலுத்தி மீன் ஒன்று 10 கிலோ எடைக்கொண்டதாகவும் வளருவதால் அவற்றை மீண்டும் வடமாநிலங்களுக்கே ஏற்றுமதி செய்துவிடுகின்றனர்.

இதனால் லாபம் கிடைப்பதாக கூறும் இவர்கள், தமிழக அரசால் தடைசெய்யப்பட்டாலும் அதிகாரிகள் கண்டுக்கொள்வதில்லை என்பதால் மீன்வளர்ப்பும்,ஏற்றுமதியும் தைரியமாகவே நடைப்பெற்று வருகிறது.

ஆப்ரிக்கன் கெலுத்தி மீன்களை வளர்ப்பதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்க்கேடும், சாப்பிடுபவர்களுக்கு உடல்உபாதைகள் உள்ளிட்டவைகள் ஏற்ப்படுவதால் அத்தகைய மீன்தொட்டிகளை தமிழக அரசு தடைவிதித்து, மீன்வளத்துறை சார்பில் விற்க்கப்படும் மீன்களை விவசாயிகளுக்கு பரிந்துரைப்பதால் அரசிற்கு வருவாய் அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்