முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ‘‘ஒசூர் மாநகராட்சி; மா நரகாட்சி’’ – முன்னாள் எம்எல்ஏ

    ஒசூர்: ஓசூர் மாநகராட்சி, மா நரகாட்சியாக செயல்பட்டு வருவதாக ஓசூர் முன்னாள் எம்எல்ஏ மனோகரன் விமர்சனம் செய்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ மனோகரன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து அவர் அளித்த பேட்டியில்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய மருத்துவக்கல்லூரியை தொடங்க நடவடிக்கை எடுத்து ஒப்புதல் வழங்கிய மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், ஓசூர் பகுதி என்பது தொழிற்சாலைகள், மலைக்கிராமங்கள், குக்கிராமங்கள் இருப்பதால் மருத்துவக்கல்லூரியை ஓசூர் பகுதியில் அமைத்திட மாநில அரசு முன்வர வேண்டும்.

    READ MORE
  • கருணை கொலை செய்யுங்க; நளினி மனு

    வேலூர்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினி, தன்னை கருணை கொலை செய்யக்கோரி பிரதமருகக்கு மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரில் ஒருவரான நளினி, விடுதலை செய்யக்கோரி நேற்று முதல் வேலூர் பெண்கள் சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் நிலையில், விடுதலை வேண்டி பலமுறை போராடியும் கிடைக்காத விரக்தியில் இருப்பதாகவும், தன்னை கருணை கொலை செய்யக்கோரி பிரதமருக்கு

    READ MORE
  • தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு

    சென்னை: தமிழகத்தின் பெரும்பாலன இடங்களில் வரும் 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வரும் நாளை மற்றும் 1,2ம் தேதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், கடலோர மற்றும் உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு

    READ MORE
  • உலகளவில் டிரண்டான #StopHindiImposition #TNAgainstHindiImposition  ஹாஸ்டேக்குகள்..!

    சென்னை: இந்திய முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு தேசிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைகள் அளித்தன. அதன்படி, அளிக்கப்பட்ட பரிந்துரைகளை வரைவு அறிக்கையாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார். அந்த வரைவு அறிக்கை 484 பக்கங்கள் கொண்டதாகும். அதில், இந்தி மொழியைக் கட்டாயாமாக்கவேண்டும். 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில், கன்னடா, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒன்றை இரண்டு

    READ MORE
  • அரசு நிதியுதவி வருமான வரம்பு ரூ.72,000 ஆக அதிகரிப்பு!

    சென்னை: தமிழக அரசின் நலதிட்ட உதவிகளை பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ.72,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே, வருமான உச்சவரம்பை அதிகரிக்க கோரி சட்டப்பேரவையில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இந்த வருமான உச்சவரம்பு ரூ.24,000 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.72,000 ஆக அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    READ MORE
  • 24 நேரமும் கடைகள் திறக்கலாம்; 3 ஆண்டுகள் நீட்டித்து தமிழக அரசு அனுமதி!

    சென்னை: தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், திரையரங்குகள், வங்கிகள், மருத்தகம் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்திருக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. இந்த அனுமதி ஓராண்டுகாலம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இரவு நேரத்தில் பெண் ஊழியர் நியமிக்கப்பட்டால் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை பின்பற்ற உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு