உலகளவில் டிரண்டான #StopHindiImposition #TNAgainstHindiImposition ஹாஸ்டேக்குகள்..!

உலகளவில் டிரண்டான #StopHindiImposition #TNAgainstHindiImposition  ஹாஸ்டேக்குகள்..!

சென்னை:

இந்திய முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு தேசிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைகள் அளித்தன. அதன்படி, அளிக்கப்பட்ட பரிந்துரைகளை வரைவு அறிக்கையாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார்.

அந்த வரைவு அறிக்கை 484 பக்கங்கள் கொண்டதாகும். அதில், இந்தி மொழியைக் கட்டாயாமாக்கவேண்டும். 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில், கன்னடா, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒன்றை இரண்டு ஆண்டுகள் பயிலவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை, தமிழகத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த கல்விக்கொள்கையின் பரிந்துரைகளான மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் இதன் தாக்கம் சமூக வலைத்தளங்களையும் விட்டுவைக்கவில்லை. உலகளவில் #StopHindiImposition #TNAgainstHindiImposition என்ற ஹாஸ்டேக்குகள் டிரண்டிங்கில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. இந்த ஹாஸ்டேக்குகளை சுமார் 30,000க்கும் பேர்பட்டோர் பதிவிட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்