தடை செய்யப்பட்ட மீன்கள் லாரியுடன் பறிமுதல்

தடை செய்யப்பட்ட மீன்கள் லாரியுடன் பறிமுதல்

ஒசூர்:

ஓசூர் அருகே, அண்டை மாநிலத்திற்கு கடத்தவிருந்த தமிழக அரசால் தடைவிதிக்கப்பட்ட 3 டன்கள் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள வருவாய்த்துறையினர் லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பத்தளப்பள்ளி என்னுமிடத்தில் மத்திய,மாநில அரசுகள் தடைவிதித்த ஆப்ரிக்கன் வகை கெளுத்தி மீன்களை லாரியில் கர்நாடகாவிற்கு கடந்தப்படுவதாக வந்ந இரகசிய தகவலின் அடிப்படையில் வருவாய்த்துறையினர் மீன்களை ஏற்றிவந்த லாரியை பறிமுதல் செய்து, லாரியினுள் இருந்த 3 டன் எடையிலான மீன்களை பொதுமக்கள் நடமாட்டம் குறைந்த இடத்தில் ஜேசிபி வாகனத்தால் குழித்தோண்டப்பட்டு மீன்களை குழியில் கொட்டி அழித்தனர்.

ஆப்ரிக்கன் வகை கெளுத்தி மீன்களுக்கு தடைவிதித்ததின் காரணம்:

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த வகை மீன்கள் கேரளா மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதியில் இருந்து ஒரு சில சமூக விரோதிகள் மூலம் இங்கு உள்ள விவசாயிகளை தொடர்பு கொண்டு, அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி, இது போன்ற கொடிய மீன்களை கொடுத்து வளர்த்து கொடுக்கும்படி அறிவுரையை வழங்கியதோடு, இதனால் அதிக லாபம் பெறலாம் என ஆசையை தூண்டி விட்டு இத்தகைய செயலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.

குறைந்தது 90 ரூபாய் முதல் 150 ரூபாய்க்குள் இத்தகைய மீன்கள் விற்பனை செய்யப்படுவதாலும் ஆட்டிறைச்சி போல இருப்பதாலும் குறைந்த விலை என்று இந்த மீன்களை மக்கள் அதிகமாக வாங்கி உட்கொள்கின்றனர். மேலும் ஓட்டல்களில் பிங்கர் ஃபிஷ் கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்தவகை மீன்களை தான் பொறித்து கொடுப்பதாக கூறப்படுகின்றது.

இந்த மீனை உட்கொள்ளும் சிறுவர்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு இருதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அதேசமயம் பெரியவர்கள் மற்றும் முதியவர்கள் இந்த மீனை உட்கொள்ளும் பொழுது அவர்களுக்கு உடல் உபாதைகள் மட்டுமல்லாமல் நுரையீரல் பகுதியில் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பார்ப்பதற்கு நம்ம ஊர் கெளுத்தி மீன்கள் போன்றே காட்சி அளிக்கும் இவை அரசால் வளர்ப்பதற்கும் விற்பதற்கும் தடைவிதிக்கப்பட்ட கிளாரியஸ் கரிபீனஸ், தாய் கேட்பிஷ், ஆப்ரிக்கன் கேட்பிஷ் போன்ற மீன்வகைகள் ..!

கோழிக் கழிவுகள், அழுகிய நாய் போன்றவைதான் இவற்றின் உணவு. குறுகிய நாட்களில் பெரிய எடை கொண்டதாக வளரக்கூடிய இந்தவகை மீன்கள், நீர் நிலைகளுக்குச் சென்றால் அங்குள்ள அனைத்து வகையான மீன்களை உண்ணும் கொடூர குணம் கொண்டவை. இதனால் மீன் உற்பத்தி பாதிக்கப்படும் என்பதாலும், இந்த வகை மீன்களை வளர்ப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்