ஸ்டாலின் எதை எதையோ பேசுகிறார்: அமைச்சர் அன்பழகன்

ஸ்டாலின் எதை எதையோ பேசுகிறார்: அமைச்சர் அன்பழகன்

ஒசூர்:

தமிழக மக்கள் முக.ஸ்டாலினை மறந்துவிடுவார்கள் என்பதனாலே எதை எதையோ பேசி வருகிறார்என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகர விளையாட்டுத்திடலில், ஓசூர் கோட்டத்திற்குட்பட்ட ஓசூர்,சூளகிரி,தேன்கனிக்கோட்டை,அஞ்செட்டி ஆகிய நான்கு தாலூகாவிற்குட்பட்ட பொதுமக்களிடம், முதலமைச்சரின் சிறப்புக்குறைத்தீர்க்கும் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் தகுதியுடைய பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் தலைமையில் நடைப்பெற்ற விழாவில், தமிழகத்தின் உயர்க்கல்வித்துறை அமைச்சர் கேபி.அன்பழகன் பங்கேற்று 3683 பயணாளிகளுக்கு வீட்டுமனை பட்டா,முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் உள்ளிட்டவையை 11 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக பேரூரையாற்றிய அன்பழகன்:

தமிழகத்தில் பொதுமக்கள் நலத்திட்ட உதவிகளையும், நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற மாநிலம் முழுவதும் முதலமைச்சரின் சிறப்பு குறைத்தீர்ப்பு கூட்டங்கள் கிராமங்கள் தோறும் நடத்தப்பட்டன அவற்றில் தகுதியுடையவர்களுக்கு தற்போது அரசு உதவிகளை வழங்கி வருவதாகவும்,

விடுபட்ட நிராகரிக்கப்பட்ட மனுக்கள், தனிநபர் தேவையை பூர்த்தி செய்திட மீண்டும் ஆய்வு செய்து பரிசிலித்திட தமிழக முதல்வர் உத்தரவிட்டிருப்பதாகவும் பேசிய அவர், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க 14 வகையான விலையற்ற பொருட்களை மாணவர்களுக்கு வழங்கி, அதிகப்படியான நிதியை கல்வித்துறைக்கு ஒதுக்கிய பெருமை மறைந்த ஜெயலலிதா அவர்களையே சாறும் என்ற அவர், தற்போதைய முதல்வரும் அம்மாவின் ஆட்சியை நடைமுறைப்படுத்தியதாக பேசினார்.

பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர்:

தமிழகத்தில் ஜெயலலிதாவிற்கு பிறகு மக்கள் மனதில் இடம் பிடித்தவர்களாக தமிழக முதல்வர்,துணை முதல்வர் ஆகியோர் விளங்கி வருகின்றனர்,

தமிழகத்தில் ஸ்டாலினை மறந்துவிடுவார்கள் என்பதனாலேயே அவர் எதைஎதையோ பேசி வருவதாகவும், மக்கள் மனதில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மமதையில் இருந்த ஸ்டாலினுக்கு, தமிழக மக்கள் விக்கிரவாண்டி,நாங்குநேரி ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மக்கள் அங்கீகாரம் வழங்கியதால் கோபத்துடன் ஸ்டாலின் பேசி வருகிறார்.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெறும் என பேசினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்