புதினா விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

புதினா விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

ஒசூர்:

ஓசூர் பகுதிகளில் புதினா தோட்டத்திலேயே ஒருக்கட்டு புதினா 15 ரூபாய்க்கு வாங்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதிகளில் புதினா விளைச்சல் குறைந்திருப்பதால், 15 ரூபாய்க்கு ஒருக்கட்டு புதினாவை விவசாயிகளிடமே பெற்றுவருவதால் நல்ல லாபம் கிடைத்து வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஓசூர் சுற்றுப்பகுதி சீரான சீதோசன நிலை நிலவுவதாலும், நல்ல மண் வளம் இருப்பதால் மலர், பழவகைகள்,கீரை உள்ளிட்டவைகள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் புதினா விளைச்சல் குறைந்தது, மார்க்கெட்டிற்கு புதினா வரத்து குறைந்ததையடுத்து புதினாவின் விலை உயர்ந்துள்ளது.

புதினாவை பயிரிட்டு ஒரு அறுவடை செய்திட 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே செலவிடப்படுகிறது, ஆண்டிற்கு புதினா 6 முறை வரை அறுவடை செய்ய முடியும்.

ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் நன்கு விளையும் புதினாவை 18000 கட்டுக்கள் வரை அறுவடை செய்யமுடியும். ஒருக்கட்டிற்கு 2 ரூபாய் வீதம் விற்க்கப்பட்டாலே லாபமீட்ட முடியும் என்கிற நிலையில் தற்போது 15 ரூபாய்க்கு விவசாயிகளிடம் நேரடியாகவே பெறப்படுவதால் ஒரு ஏக்கருக்கு 2.50 லட்சம் ரூபாய்வரை லாபம் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்