முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ஹெல்மட் வழங்கி விழிப்புணர்வு

    ஒசூர்: ஓசூர் அருகே மோட்டார் இயந்திர பழுதுப்பார்ப்போருக்கான ஆலோசனை கூட்டத்தில், சாலை விபத்தை தவிர்க்க ஹெல்மட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி தனியார் மண்டபத்தில் குடிநீர் மோட்டார் உள்ளிட்ட மின்மோட்டார்களை பயன்படுத்தும் விவசாயிகள், பஞ்சாயத்து வாட்டர் மேன்கள் மற்றும் பழுதுப்பார்ப்போருக்கான ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த மின்மோட்டர் நிறுவன ஊழியர்கள் இவர்களுக்கான பயிற்சிகளும், ஆலோசனைகளும் வழங்கினர். இந்த ஆலோசனை கூட்டத்தில், சாலை விபத்துக்களில் உயிரிழப்புக்களை தடுக்க விவசாயிகள்,பொதுமக்கள் கட்டாயம்

    READ MORE
  • இருவர் கொலை: 3 பேருக்கு போலீஸ் காவல்

    ஒசூர்: பெட்ரோல் குண்டு வீசி 2 பேரை கொன்ற வழக்கில் சரணடைந்த மூவருக்கு 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஒசூர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி அருகே சானமாவு என்ற இடத்தில் கார் மீது லாரியை மோத விட்ட கூலிப்படையினர், கார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். இதில் காரில் சென்ற டிரைவர் முரளி, ஓசூர் பெண் தொழில் அதிபர் நீலிமா ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த இரட்டை கொலை வழக்கு

    READ MORE
  • 17 பேர் பலி: வீட்டு உரிமையாளர் கைது

    மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே 17 பேர் பலியாக காரணமாக இருந்த சுற்றுச்சுவர் கட்டிய வீட்டின் உரிமையாளர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த நடூரில், கனமழை காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, உயிரிழப்புக்கு காரணமான அந்த வீட்டின் உரிமையாளரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில், நடூர் பங்களாவின் உரிமையாளரான தொழிலதிபர் சிவசுப்பிரமணியத்தை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.

    READ MORE
  • 2 நாட்களுக்கு கனமழை..! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

    சென்னை: தமிழகத்தில் நிலவிவரும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும், மீனவர்கள் கடலுக்குள் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம்

    READ MORE
  • சிலைக்கடத்தலை விசாரித்த சிறப்பு அமர்வு கலைப்பு!

    சென்னை: தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு அமர்வை கலைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள கோவில் சிலைகள் மற்றும் நகைகள் திருட்டு சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது. கடந்த 2018 ஜூலையில் நீதிபதி மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது. சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டு ஓராண்டு ஆனநிலையில், தற்போது வழக்குகள் எண்ணிக்கை குறைந்து வருவதாக, இந்த சிறப்பு அமர்வு நியமித்த அறிவிப்பாணையை மாற்றியமைத்தது உயர்நீதிமன்ற

    READ MORE
  • தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

    சென்னை: தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் பாலாஜி, ராஜா ராமன் மற்றும் மதுரை கலெக்டர் நாகராஜன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாலாஜி பொதுப்பணித்துறை கூடுதல் செயலராகவும், ராஜாராமன் நகர்ப்புற மற்றும் திட்டமிடல் துறையின் இயக்குநராகவும், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த நாகராஜனை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு