ஹெல்மட் வழங்கி விழிப்புணர்வு

ஹெல்மட் வழங்கி விழிப்புணர்வு

ஒசூர்:

ஓசூர் அருகே மோட்டார் இயந்திர பழுதுப்பார்ப்போருக்கான ஆலோசனை கூட்டத்தில், சாலை விபத்தை தவிர்க்க ஹெல்மட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி தனியார் மண்டபத்தில் குடிநீர் மோட்டார் உள்ளிட்ட மின்மோட்டார்களை பயன்படுத்தும் விவசாயிகள், பஞ்சாயத்து வாட்டர் மேன்கள் மற்றும் பழுதுப்பார்ப்போருக்கான ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த மின்மோட்டர் நிறுவன ஊழியர்கள் இவர்களுக்கான பயிற்சிகளும், ஆலோசனைகளும் வழங்கினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், சாலை விபத்துக்களில் உயிரிழப்புக்களை தடுக்க விவசாயிகள்,பொதுமக்கள் கட்டாயம் தலைகவசம் பயன்படுத்த வலியுறுத்தி அனைவருக்கும் இலவச ஹெல்மெட் வழங்கப்பட்டது.

பின்னர் பசுமை புரட்சி என்னும் தலைப்பில் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்