முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி

    வாணியம்பாடி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் சென்ற பேரறிவாளன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை வீட்டில் பேரறிவாளன் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி பரோல் விடுப்பில் வீட்டில் உள்ள பேரறிவாளன் சிறுநீரக நோய் தொற்று காரணமாக வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    READ MORE
  • நேருக்குநேர் மோதும் பைக்குகள்; shocking video

    ஒசூர்: ஒசூர் அருகே, இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொள்ளும் சிசிடிவி வீடியோ பதிவுகள் பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே பெண்ணங்கூர் என்னுமிடத்தில் சாலையில் அதிவேகமாக வரும் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொள்ளும் வீடியோ அருகில் உள்ள எரிப்பொருள் நிரப்பும் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. வாகனங்கள் மோதிக்கொள்ளும் வீடியோவினை பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் வீடியோ அமைந்திருக்கிறது.

    READ MORE
  • கோவை சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு

    கோவை: கோவையில் சிறுமி பாலியன் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியான சந்தோஷ்குமாருக்கு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூர் அருகில் உள்ள பன்னிமடை பகுதியில், கடந்த மார்ச் மாதம் அவரது வீட்டின் அருகே 7 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் நடந்த சிறுமியின் பிரேத பரிசோதனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து

    READ MORE
  • 20 ஆண்டு அரியர்..! சென்னை பல்கலை., சிறப்பு அனுமதி!!

    சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வியில் 20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்போர் தேர்வு எழுத சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் துரைசாமி கூறுகையில், டிசம்பர் 2019, மே 2020 ஆகிய பருவத் தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சிபெற்றுக்கொள்ள கடைசி வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தேர்வு மூலம் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.  

    READ MORE
  • பஸ் டே கொண்டாட்டம்: 9 மாணவர்கள் சஸ்பெண்ட்!

    சென்னை: தடையை மீறி பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சென்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்கள், நேற்று முன்தினம் ஷெனாய் நகரிலிருந்து புறப்பட்ட மாநகர பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பேருந்தின் கூரையின் மீது ஏறி தடையை மீறி பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென பேருந்தின் கூரையிலிருந்து சாலையிலேயே மளமளவென சரிந்து விழுந்தனர். இதுதொடர்பாக பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 13 மாணர்களை சென்னை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

    READ MORE
  • முதன் முறையாக திருநங்கைகளுக்கு அரசு மருத்துவமனையில் பணி!

    சென்னை: தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பணிபுரிய 8 திருநங்கைகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பணி நியமன ஆணையை வழங்கினார். தஞ்சாவூர் அரச மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயங்கிவரும் 24 மணி நேர மகப்பேறு மருத்துவ பிரிவில் முதன்முறையாக 8 திருநங்கைகள் காவலர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையை சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வழங்கினார்.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு