முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • வாக்கு எண்ணும் அறைக்கு சீல்

    ஒசூர்: ஒசூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குப்பெட்டிக்கள், வாக்கு எண்ணும் மையத்தில் முகவர் முன்னிலையில் அறைக்கு சீலிடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஊராட்சி ஒன்றியத்தில் 184 வாக்குச்சாவடிகளில் நேற்று பதிவான வாக்குப்பெட்டிக்கள், தேர்தல் வாக்கு எண்ணும் மையமான ஒசூர் அரசு கலைக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. 184 வாக்குப்பெட்டிக்கள் இரண்டு அறைகளில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆப்தாப் பேகம் தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் சீலிட்டனர், அரசியல் கட்சிகளை சேர்ந்த முகவர்களின் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி பாதுகாப்பு கேமராக்கள்

    READ MORE
  • குப்பையில் குட்கா குவியல்

    ஒசூர்: ஒசூரில் குப்பையில் வீசப்பட்ட தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை மாநகராட்சி அதிகாரிகள் அள்ளிச் சென்றனர். ஒசூரில் சாலையோர குப்பை கொட்டும் இடத்தில் ஆயிரக்கணக்கான தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் கொட்டப்பட்டு கிடந்தன. இதனைப்பார்த்த பொதுமக்கள் ஒசூர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு தகவல் அளித்தனர் இதனைத் தொடர்ந்து அவர்கள் குப்பையில் கிடந்த குட்கா பாக்கெட்டுகளை அள்ளிச் சென்றனர். ஒசூர் நகரின் பல்வேறு இடங்களில் மத்திய மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதை பாக்கெட்டுகள்

    READ MORE
  • பனி மூட்டம்; வாகனங்கள் கடும் அவதி

    ஒசூர்: ஒசூர் பகுதிகளில் எதிரில் இருப்பவர்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் நிலவுதால், முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு செல்லும் வாகன ஓட்டிகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதிக்கு, குட்டி இங்கிலாந்து என்கிற பெயரும் உண்டு, அதற்கான காரணம் ஒசூர் பகுதி குளிர்ச்சியான பகுதியாகவே காணப்படுவதால் தான். எப்போதும் குளிர்ந்த நிலை நிலவினாலும், டிசம்பர் ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவு அதிகரித்து அதிகப்படியான குளிர்நிலவுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்தநிலையில் இன்று அதிகாலை ஒசூர் பகுதிகளில் பனிப்பொழிவு படிப்படியாக அதிகரிக்க

    READ MORE
  • பொறியில் கல்லூரிகளில் புதிய கட்டணம்..!

    சென்னை: அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் புதிய கட்டணத்தை அமல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் ஷர்மா கூறுகையில், பல்கலைக்கழகம் கொடுத்த கட்டண உயர்வில் 30 சதவீதத்தை குறைத்துள்ளோம். சிண்டிகேட் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெற்றதும் கட்டணம் அமலுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

    READ MORE
  • ரயில் தண்ணீரை பயன்படுத்தும் சென்னை வாசிகள்.!

    சென்னை: இந்த வருடம் பருவமழை பொய்த்து போனதால் சென்னை மாநகரத்துக்கு தண்ணீர் சப்ளை செய்யும் ஏரிகள் அனைத்தும் வறண்டு போய் விட்டது. இதனால் சென்னை மாநகரம் தண்ணீர் பஞ்சத்தின் உச்சத்தில் உள்ளது. சென்னைக்கு ஒரு நாளுக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் தடுமாறி வருகின்றது. சென்னையில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு

    READ MORE
  • சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை.!

    சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.72.64 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.67.46 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூன் 20) காலை முதல் அமலுக்கு வந்தது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் ஐந்தாவது நாளாக பெட்ரோல் விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.72.64 ஆக தொடர்கிறது. டீசல், ஐந்து நாட்களுக்கு பிறகு, 6 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.67.46 காசுகளாகவும் உள்ளது.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு