குப்பையில் குட்கா குவியல்

குப்பையில் குட்கா குவியல்

ஒசூர்:

ஒசூரில் குப்பையில் வீசப்பட்ட தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை மாநகராட்சி அதிகாரிகள் அள்ளிச் சென்றனர்.

ஒசூரில் சாலையோர குப்பை கொட்டும் இடத்தில் ஆயிரக்கணக்கான தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் கொட்டப்பட்டு கிடந்தன. இதனைப்பார்த்த பொதுமக்கள் ஒசூர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு தகவல் அளித்தனர் இதனைத் தொடர்ந்து அவர்கள் குப்பையில் கிடந்த குட்கா பாக்கெட்டுகளை அள்ளிச் சென்றனர்.

ஒசூர் நகரின் பல்வேறு இடங்களில் மத்திய மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதை பாக்கெட்டுகள் பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

போலீசார் அவ்வப்போது குட்கா போதைப்பொருள் விற்கப்படுவதை தடுத்து வந்தாலும், தொடர்ந்து அதன் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஒசூர் நேதாஜிநகர் பகுதியில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்பராக் உள்ளிட்ட போதை பொருள்கள் ஆயிரக்கணக்கான பாக்கெட்டுகள் கொட்டப்பட்டு கிடந்தன.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் குப்பையில் கொட்டி கிடந்த ஆயிரக்கணக்கான தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை வாகனங்களில் அள்ளிச் சென்றனர். குப்பையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கொட்டி சென்றவர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்